வெசாக் தினத்தை முன்னிட்டு வுவனியாவில் நல்லிணக்கத்தை வலியுறுத்தி இன்று தன்சல் வழங்கப்பட்டது.
வவுனியா, ஏ9 வீதியில் மூன்றுமுறிப்பு பிள்ளையார் ஆலயம் அருகாமையில் வைத்து இந்து மதகுருமார்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், தமிழ் சிவில் அமைப்புகள் மற்றும் தமிழ் மக்கள் இணைந்து இதனை வழங்கியிருந்தனர்.
தென்பகுதியில் இருந்து வடக்கிற்கு வரும் பௌத்த சகோதர, சகோதரிகளுக்கு குளிர்பானம், பிஸ்கட் போன்றவற்றை வழங்கி அவர்களின் நலலிணக்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதேவேளை மூதூர் பொலிஸ் நிலையப் பொலிஸாரின் ஏற்பாட்டில் வெசாக் தினத்தை முன்னிட்டு மூதூர் பிரதான வீதியில் வைத்து இன்று காலை குளிர்பான தன்சல் வழங்கி வைக்கப்பட்டது.
இன,மத பேதங்களுக்கு அப்பால் வீதியால் பயணித்த பொதுமக்கள் குளிர்பான தன்சலை மகிழ்ச்சியோடு வாங்கி பருகியதை காணமுடிந்தது.
வெசாக் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் வழங்கப்பட்ட தன்சல் வெசாக் தினத்தை முன்னிட்டு வுவனியாவில் நல்லிணக்கத்தை வலியுறுத்தி இன்று தன்சல் வழங்கப்பட்டது.வவுனியா, ஏ9 வீதியில் மூன்றுமுறிப்பு பிள்ளையார் ஆலயம் அருகாமையில் வைத்து இந்து மதகுருமார்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், தமிழ் சிவில் அமைப்புகள் மற்றும் தமிழ் மக்கள் இணைந்து இதனை வழங்கியிருந்தனர்.தென்பகுதியில் இருந்து வடக்கிற்கு வரும் பௌத்த சகோதர, சகோதரிகளுக்கு குளிர்பானம், பிஸ்கட் போன்றவற்றை வழங்கி அவர்களின் நலலிணக்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.இதேவேளை மூதூர் பொலிஸ் நிலையப் பொலிஸாரின் ஏற்பாட்டில் வெசாக் தினத்தை முன்னிட்டு மூதூர் பிரதான வீதியில் வைத்து இன்று காலை குளிர்பான தன்சல் வழங்கி வைக்கப்பட்டது.இன,மத பேதங்களுக்கு அப்பால் வீதியால் பயணித்த பொதுமக்கள் குளிர்பான தன்சலை மகிழ்ச்சியோடு வாங்கி பருகியதை காணமுடிந்தது.