• May 12 2025

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த விராட் கோலி

Thansita / May 12th 2025, 4:00 pm
image

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓய்வு அறிவிப்பை  வெளியிட்டுள்ளார். அவரது பதிவில்,

இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆரம்பித்து 14 ஆண்டுகள் ஆகின்றன.

 14 வருடங்களுக்கு முன்பு முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நீல உடையை அணிந்தேன்.இந்த விளையாட்டு என்னை இப்படி இந்த அளவுக்கு மாற்றும் என்று நினைக்கவே இல்லை. இது என்னை சோதித்து, என்னை ஒரு நல்ல வீரனாக உருவாக்கி, வாழ்க்கைக்கு தேவையான பல பாடங்களை கற்றுக்கொடுத்தது. வெள்ளை உடையில் விளையாடுவது ஒரு தனி உணர்வு.

அமைதியாக உழைப்பது, நீண்ட நேரம் மைதானத்தில் இருப்பது, யாரும் கவனிக்காத சிறு தருணங்கள் முதல்கொண்டு இவை எல்லாம் மறக்கவே முடியாது.

இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு விலகுவது கஷ்டமாக இருந்தாலும், இது சரியான முடிவு என்று தோன்றுகிறது.

நான் இதற்கு என் முழு முயற்சியையும் கொடுத்தேன். இந்த விளையாட்டு எனக்கு நிறைய கொடுத்தது. விளையாட்டுக்கு, என்னுடன் விளையாடியவர்களுக்கு, என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி.

என் டெஸ்ட் வாழ்க்கையை எப்போதும் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்வேன்” எனவும் வருத்தத்துடன் தன்னுடைய டெஸ்ட் போட்டியின் ஓய்வை அறிவித்திருக்கிறார். 

மேலும் இதுவரை விராட் கோலி 123 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 9230 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 30 சதங்களும், 31 அரை சதங்களும் அடங்கும்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓய்வு அறிவிப்பை  வெளியிட்டுள்ளார். அவரது பதிவில்,இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆரம்பித்து 14 ஆண்டுகள் ஆகின்றன. 14 வருடங்களுக்கு முன்பு முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நீல உடையை அணிந்தேன்.இந்த விளையாட்டு என்னை இப்படி இந்த அளவுக்கு மாற்றும் என்று நினைக்கவே இல்லை. இது என்னை சோதித்து, என்னை ஒரு நல்ல வீரனாக உருவாக்கி, வாழ்க்கைக்கு தேவையான பல பாடங்களை கற்றுக்கொடுத்தது. வெள்ளை உடையில் விளையாடுவது ஒரு தனி உணர்வு. அமைதியாக உழைப்பது, நீண்ட நேரம் மைதானத்தில் இருப்பது, யாரும் கவனிக்காத சிறு தருணங்கள் முதல்கொண்டு இவை எல்லாம் மறக்கவே முடியாது.இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு விலகுவது கஷ்டமாக இருந்தாலும், இது சரியான முடிவு என்று தோன்றுகிறது. நான் இதற்கு என் முழு முயற்சியையும் கொடுத்தேன். இந்த விளையாட்டு எனக்கு நிறைய கொடுத்தது. விளையாட்டுக்கு, என்னுடன் விளையாடியவர்களுக்கு, என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. என் டெஸ்ட் வாழ்க்கையை எப்போதும் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்வேன்” எனவும் வருத்தத்துடன் தன்னுடைய டெஸ்ட் போட்டியின் ஓய்வை அறிவித்திருக்கிறார்.  மேலும் இதுவரை விராட் கோலி 123 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 9230 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 30 சதங்களும், 31 அரை சதங்களும் அடங்கும்.

Advertisement

Advertisement

Advertisement