களுத்துறை, வடக்கு - வஸ்கடுவ பிரதேசத்தில் பேக்கரி தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
மத்துகம - அகலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சம்பவத்தன்று, பேக்கரி உரிமையாளர், தனது தொழிலாளி பேக்கரி படிக்கட்டில் சடலமாக கிடப்பதை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பேக்கரியில் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு களுத்துறை, வடக்கு - வஸ்கடுவ பிரதேசத்தில் பேக்கரி தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.மத்துகம - அகலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்பவத்தன்று, பேக்கரி உரிமையாளர், தனது தொழிலாளி பேக்கரி படிக்கட்டில் சடலமாக கிடப்பதை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.