• Mar 26 2026

திருகோணமலையில் உலக வாய் சுகாதார தின நிகழ்வு!

Ziya / Mar 25th 2026, 3:53 pm
image

உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு தரப்பினருக்குமான விழிப்புணர்வு மற்றும் பல் சிகிச்சை முகாம் இன்று (25) திருகோணமலை தலைமை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.


கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின், பல் சுகாதார அசோசியேஷன் (Eastern Province Dental Health Association) இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.


சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுரேஷ் கந்தவேல் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.


இந்நிகழ்வில், பிரதம அதிதியாக திருகோணமலை பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் புவேந்திரநாதன் கலந்துகொண்டார். 


சிறப்பு அதிதியாக திருகோணமலை பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி மஹிந்த திசாநாயக்க கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.


தொடர்ந்து வாய் சுகாதாரம் மற்றும் வாய் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு உரைகளை  J. P. S. A. ஜெயலத் (திருகோணமலை கடற்படை பல் வைத்தியர்),

யாஷிதா (பாடசாலை பல் சுகாதார சிகிச்சையாளர்).வைத்தியர் ஏ. எச். சமீம் (கிண்ணியா தள வைத்தியசாலை),வைத்தியர் சி. பிரனவன் (கிழக்கு மாகாண பல் மருத்துவ சுகாதார சங்கத்தின் செயலாளர்) ஆகியோர் நிகழ்த்தினார்.


இந்த விசேட நிகழ்வின் போது, பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களுக்கு வாய் மற்றும் பல் நோய்கள் தொடர்பான பரிசோதனைகளும் சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்பட்டன. இதில் பெருந்திரளான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.


இந்த விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாமிற்கு ஹேலியோன் (HALEON) நிறுவனம் முழுமையான அனுசரணையை வழங்கியிருந்தது.

திருகோணமலையில் உலக வாய் சுகாதார தின நிகழ்வு உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு தரப்பினருக்குமான விழிப்புணர்வு மற்றும் பல் சிகிச்சை முகாம் இன்று (25) திருகோணமலை தலைமை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின், பல் சுகாதார அசோசியேஷன் (Eastern Province Dental Health Association) இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுரேஷ் கந்தவேல் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.இந்நிகழ்வில், பிரதம அதிதியாக திருகோணமலை பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் புவேந்திரநாதன் கலந்துகொண்டார். சிறப்பு அதிதியாக திருகோணமலை பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி மஹிந்த திசாநாயக்க கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து வாய் சுகாதாரம் மற்றும் வாய் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு உரைகளை  J. P. S. A. ஜெயலத் (திருகோணமலை கடற்படை பல் வைத்தியர்),யாஷிதா (பாடசாலை பல் சுகாதார சிகிச்சையாளர்).வைத்தியர் ஏ. எச். சமீம் (கிண்ணியா தள வைத்தியசாலை),வைத்தியர் சி. பிரனவன் (கிழக்கு மாகாண பல் மருத்துவ சுகாதார சங்கத்தின் செயலாளர்) ஆகியோர் நிகழ்த்தினார்.இந்த விசேட நிகழ்வின் போது, பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களுக்கு வாய் மற்றும் பல் நோய்கள் தொடர்பான பரிசோதனைகளும் சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்பட்டன. இதில் பெருந்திரளான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.இந்த விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாமிற்கு ஹேலியோன் (HALEON) நிறுவனம் முழுமையான அனுசரணையை வழங்கியிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement