• Nov 22 2024

191-வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் மிக வயதான ஆமை! samugammedia

Tamil nila / Dec 2nd 2023, 6:49 am
image

ஜோனாதனின் வேகமும் சுறுசுறுப்பும் குறைவதற்கான அறிகுறி இல்லை என்று, அதனை பராமரித்து வரும் கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸ் தெரிவித்துள்ளார்.

அட்லாண்டிக் பெருங்கடலின் தொலைதூர தீவான செயின்ட் ஹெலனா தீவில் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு ஆமை, உலகின் மிக வயதான ஆமை என்ற சிறப்பை பெற்றுள்ளது. அந்த ஆமையின் பெயர் ஜோனாதன்.

கி.பி. 1832ஆம் ஆண்டு பிறந்ததாக கணிக்கப்பட்டுள்ள இந்த ஆமையானது, 1882-ல் செசல்சில் இருந்து செயின்ட் ஹெலனா தீவுக்குக் கொண்டு வரப்பட்டது.

வயதானாலும் சுறுசுறுப்புடன் வலம் வரும் ஜோனாதன், இந்த ஆண்டு 191வது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இதுதொடர்பான வீடியோவை கின்னஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

'ஜோனாதன் ஆமை வாசனை உணர்வை இழந்துவிட்டது, கண்புரை நோயால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட பார்வை மங்கிவிட்டது. எனினும், சாப்பிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. வாரத்திற்கு ஒருமுறை பழங்கள் மற்றும் காய்கறிகளை பராமரிப்பு குழுவினர் ஊட்டுகின்றனர்' என்றும் மருத்துவர் குறிப்பிட்டார்.


191-வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் மிக வயதான ஆமை samugammedia ஜோனாதனின் வேகமும் சுறுசுறுப்பும் குறைவதற்கான அறிகுறி இல்லை என்று, அதனை பராமரித்து வரும் கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸ் தெரிவித்துள்ளார்.அட்லாண்டிக் பெருங்கடலின் தொலைதூர தீவான செயின்ட் ஹெலனா தீவில் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு ஆமை, உலகின் மிக வயதான ஆமை என்ற சிறப்பை பெற்றுள்ளது. அந்த ஆமையின் பெயர் ஜோனாதன்.கி.பி. 1832ஆம் ஆண்டு பிறந்ததாக கணிக்கப்பட்டுள்ள இந்த ஆமையானது, 1882-ல் செசல்சில் இருந்து செயின்ட் ஹெலனா தீவுக்குக் கொண்டு வரப்பட்டது.வயதானாலும் சுறுசுறுப்புடன் வலம் வரும் ஜோனாதன், இந்த ஆண்டு 191வது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இதுதொடர்பான வீடியோவை கின்னஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.'ஜோனாதன் ஆமை வாசனை உணர்வை இழந்துவிட்டது, கண்புரை நோயால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட பார்வை மங்கிவிட்டது. எனினும், சாப்பிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. வாரத்திற்கு ஒருமுறை பழங்கள் மற்றும் காய்கறிகளை பராமரிப்பு குழுவினர் ஊட்டுகின்றனர்' என்றும் மருத்துவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement