டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு வருடத்தினுள் அதிக எண்ணிக்கையிலான சிக்ஸர்களை பதிவுசெய்தவர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணி வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் தனதாக்கியுள்ளார்.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் இந்த சாதனையைத் தனதாக்கினார்.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஓட்டம் எதனையும் பெறாது ஆட்டமிழந்த யசஸ்வி ஜெய்ஸ்வால், 2 ஆவது இன்னிங்சில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 நான்கு ஓட்டங்கள் உட்பட 90 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.
அதற்கமைய தற்போது அவர் பதிவுசெய்த இந்த 2 சிக்ஸர்களையும் சேர்த்து நடப்பாண்டில் மாத்திரம் டெஸ்ட் போட்டிகளில் 34 சிக்ஸர்களை அவர் பெற்றுள்ளார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கல்லம் ஒரு ஆண்டில் 33 சிக்ஸர்களை பெற்று இந்த சாதனையைத் தன்வசப்படுத்தியிருந்தார்.
குறித்த பட்டியலில் பென் ஸ்டோக்ஸ் 26 சிக்ஸர்களுடன் 3 ஆவது இடத்திலும், கில்கிறிஸ்ட் மற்றும் விரேந்தர் ஷெவாக் ஆகியோர் தலா 22 சிக்ஸர்களுடன் 4 ஆவது இடத்திலும் உள்ளனர்.
டெஸ்டில் புதிய வரலாறு- யசஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ள புதிய சாதனை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு வருடத்தினுள் அதிக எண்ணிக்கையிலான சிக்ஸர்களை பதிவுசெய்தவர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணி வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் தனதாக்கியுள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் இந்த சாதனையைத் தனதாக்கினார். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஓட்டம் எதனையும் பெறாது ஆட்டமிழந்த யசஸ்வி ஜெய்ஸ்வால், 2 ஆவது இன்னிங்சில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 நான்கு ஓட்டங்கள் உட்பட 90 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். அதற்கமைய தற்போது அவர் பதிவுசெய்த இந்த 2 சிக்ஸர்களையும் சேர்த்து நடப்பாண்டில் மாத்திரம் டெஸ்ட் போட்டிகளில் 34 சிக்ஸர்களை அவர் பெற்றுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கல்லம் ஒரு ஆண்டில் 33 சிக்ஸர்களை பெற்று இந்த சாதனையைத் தன்வசப்படுத்தியிருந்தார். குறித்த பட்டியலில் பென் ஸ்டோக்ஸ் 26 சிக்ஸர்களுடன் 3 ஆவது இடத்திலும், கில்கிறிஸ்ட் மற்றும் விரேந்தர் ஷெவாக் ஆகியோர் தலா 22 சிக்ஸர்களுடன் 4 ஆவது இடத்திலும் உள்ளனர்.