இந்தியாவின் பண்டைய உடல், மன நலன் மற்றும் ஆன்மீக கலையான யோகாவானது தற்போழுது பாகிஸ்தானிலும் அறிமுகமாகியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அந்த நாட்டின் ‘தலைநகா் மேம்பாட்டு ஆணையம் (சிடிஏ)’ தனது முகநூல் பக்கத்தில் இத் தகவலை வெளியிட்டுள்ளது. அதில், இஸ்லாமாபாத் பெருநகர மாநகராட்சி சாா்பில் தலைநகரில் உள்ள ‘எஃப்-9’ பூங்காவில் குழந்தைகள் மற்றும் பெரியவா்களுக்கான இலவச யோகா பயிற்சி வகுப்புகள் தொடங்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பலா் ஏற்கெனவே ஆா்வமுடன் இந்த யோகா பயிற்சியில் இணைந்திருப்பதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் தற்போது முறையான யோகா பயிற்சி மையங்கள் இல்லாத நிலையில், இஸ்லாமாபாத் பெருநகர மாநகராட்சி மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் அந்த அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் அறிமுகமான யோகா- தலைநகா் மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு இந்தியாவின் பண்டைய உடல், மன நலன் மற்றும் ஆன்மீக கலையான யோகாவானது தற்போழுது பாகிஸ்தானிலும் அறிமுகமாகியுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் அந்த நாட்டின் ‘தலைநகா் மேம்பாட்டு ஆணையம் (சிடிஏ)’ தனது முகநூல் பக்கத்தில் இத் தகவலை வெளியிட்டுள்ளது. அதில், இஸ்லாமாபாத் பெருநகர மாநகராட்சி சாா்பில் தலைநகரில் உள்ள ‘எஃப்-9’ பூங்காவில் குழந்தைகள் மற்றும் பெரியவா்களுக்கான இலவச யோகா பயிற்சி வகுப்புகள் தொடங்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பலா் ஏற்கெனவே ஆா்வமுடன் இந்த யோகா பயிற்சியில் இணைந்திருப்பதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.பாகிஸ்தானில் தற்போது முறையான யோகா பயிற்சி மையங்கள் இல்லாத நிலையில், இஸ்லாமாபாத் பெருநகர மாநகராட்சி மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் அந்த அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.