டெக்சாஸில் உள்ள அமெரிக்காவின் நான்காவது பெரிய நகரமான ஹூஸ்டனில் ஏற்பட்டுள்ள மலை வெள்ளத்தில் சிக்கியுள்ள 600-க்கும் அதிகமான பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில் கனமழை நீடிக்கும் என கணிக்கப்படுவதால் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது.
அடுத்த கனமழை (அமெரிக்க நேரப்படி) வாய்ப்பு ஞாயிற்றுக்கிழமை ஏற்படும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஹூஸ்டனுக்கு வடகிழக்கில் உள்ள ஸ்பெளன்டோராவில் கடந்த 5 நாள்களாக 53 செமீ மழை பெய்து வருவதுடன் அந்த பகுதியில் 180-க்கும் அதிகமான மக்கள் மற்றும் 122 செல்ல பிராணிகள் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஹூஸ்டன் மெட்ரோ பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் இந்த மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் ஈஸ்ட் போர்க் சான் ஜாஸிண்டோ பகுதியில் மின் கம்பங்கள் வரை வெள்ளநீர் செல்வதாக ஹூஸ்டன் குரோனிக்கிள் தெரிவித்துள்ளது. சான் ஜாஸிண்டோ ஆற்றுப் பகுதியின் கரையோரம் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பான இடத்திற்கு செல்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு மாதங்கள் பெய்ய வேண்டிய மழை ஒரே வாரத்தில் பெய்துள்ளதாக சனிக்கிழமை ஹூஸ்டன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிழக்கு டெக்சாஸில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம்- கடும் சிரமத்தின் மத்தியில் 600 பேர் மீட்பு. டெக்சாஸில் உள்ள அமெரிக்காவின் நான்காவது பெரிய நகரமான ஹூஸ்டனில் ஏற்பட்டுள்ள மலை வெள்ளத்தில் சிக்கியுள்ள 600-க்கும் அதிகமான பேர் மீட்கப்பட்டுள்ளனர்.அதனடிப்படையில் கனமழை நீடிக்கும் என கணிக்கப்படுவதால் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது.அடுத்த கனமழை (அமெரிக்க நேரப்படி) வாய்ப்பு ஞாயிற்றுக்கிழமை ஏற்படும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஹூஸ்டனுக்கு வடகிழக்கில் உள்ள ஸ்பெளன்டோராவில் கடந்த 5 நாள்களாக 53 செமீ மழை பெய்து வருவதுடன் அந்த பகுதியில் 180-க்கும் அதிகமான மக்கள் மற்றும் 122 செல்ல பிராணிகள் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.அத்துடன் ஹூஸ்டன் மெட்ரோ பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் இந்த மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மேலும் ஈஸ்ட் போர்க் சான் ஜாஸிண்டோ பகுதியில் மின் கம்பங்கள் வரை வெள்ளநீர் செல்வதாக ஹூஸ்டன் குரோனிக்கிள் தெரிவித்துள்ளது. சான் ஜாஸிண்டோ ஆற்றுப் பகுதியின் கரையோரம் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பான இடத்திற்கு செல்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நான்கு மாதங்கள் பெய்ய வேண்டிய மழை ஒரே வாரத்தில் பெய்துள்ளதாக சனிக்கிழமை ஹூஸ்டன் அதிகாரிகள் தெரிவித்தனர்.