• Mar 24 2025

மனைவியுடன் சென்ற யோசிதவின் அடாவடித்தனம்; இரவுநேர களியாட்ட விடுதியில் மோதல்

Chithra / Mar 23rd 2025, 7:37 am
image


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோசித ராஜபக்ச இரவு நேர களியாட்ட விடுதியில் மோதலில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

கொழும்பிலுள்ள விடுதிக்கு சென்ற யோசித ராஜபக்ச, அவரது மனைவி உள்ளிட்ட குழுவினர் குழப்பம் விளைவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விடுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலை யோசித தரப்பு ஏற்க மறுத்தமையினால் முறுகல் நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரவு விடுதியின் வழக்கமான நுழைவு நடைமுறைகளின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு ஊழியர்கள் அடையாள மணிக்கட்டு பட்டைகள் அணியுமாறு கூறினர்.

இதற்கு அந்த குழு இணங்க மறுத்ததால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு மோதலாக மாறியது, இது உடல் ரீதியான வன்முறையாக மாறியது.

இரவு விடுதியில் இருந்த பவுன்சர்கள் பின்னர் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

யோசித குழுவின் தாக்குதலுக்கு உள்ளான பாதுகாப்பு பணியாளர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து கொம்பனி தெரு பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். 

மனைவியுடன் சென்ற யோசிதவின் அடாவடித்தனம்; இரவுநேர களியாட்ட விடுதியில் மோதல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோசித ராஜபக்ச இரவு நேர களியாட்ட விடுதியில் மோதலில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள விடுதிக்கு சென்ற யோசித ராஜபக்ச, அவரது மனைவி உள்ளிட்ட குழுவினர் குழப்பம் விளைவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.விடுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலை யோசித தரப்பு ஏற்க மறுத்தமையினால் முறுகல் நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இரவு விடுதியின் வழக்கமான நுழைவு நடைமுறைகளின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு ஊழியர்கள் அடையாள மணிக்கட்டு பட்டைகள் அணியுமாறு கூறினர்.இதற்கு அந்த குழு இணங்க மறுத்ததால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு மோதலாக மாறியது, இது உடல் ரீதியான வன்முறையாக மாறியது.இரவு விடுதியில் இருந்த பவுன்சர்கள் பின்னர் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.யோசித குழுவின் தாக்குதலுக்கு உள்ளான பாதுகாப்பு பணியாளர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விவகாரம் குறித்து கொம்பனி தெரு பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement