• Mar 11 2026

வாக்களித்த தமிழருக்கு முழுத் துரோகத்தை இழைத்துள்ளீர்கள்! சபையில் கஜேந்திரகுமார் எம்.பி சீற்றம்

dorin / Nov 17th 2025, 10:10 pm
image

உங்களை நம்பி, நீங்கள் சொன்னதையெல்லாம் நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்திருக்கின்றீர்கள்.

என  தேசிய மக்கள் சக்தி அரசைக் கடுமையாகச் சாடி இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் 

நீதி அமைச்சு மீதான விவாதத்தின்போது திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக பெளத்த வணக்கஸ்தலம் அமைக்கப்பட்டு வருகின்றமைக்கும்

 அங்கு அடாத்தாகப் புத்தர் சிலை நிறுவப்பட்டமைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து உரையாற்றும்போதே கஜேந்திரகுமார்  எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்

"திருகோணமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்று இரவு அகற்றிய போது

 சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை.

ஏனெனில் இனவாதத்தையும் மதவாதத்தையும் நீக்குவதாக நீங்கள் சொன்னதை நம்பி அவர்கள் உங்களுக்கே வாக்களித்திருந்தார்கள்.

இங்கிருக்கும் திருகோணமலைக்கான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரையும் அவர்கள் தெரிவு செய்திருந்தார்கள்.

நீங்கள் நேற்று இரவு எடுத்த நடவடிக்கையை எதிர்த்ததெல்லாம் சிங்களக் காடையர்கள் மட்டுமே.அதைக்கண்டு நீங்கள் உண்மையில் பின்வாங்கியிருந்திருக்கக்கூடாது. அந்த இனவாத - மதவாத காடைத்தனத்தைக் கண்டு பின்வாங்கியிருந்திருக்கக்கூடாது.

உண்மையில் நீங்கள் என்ன செய்திருக்கவேண்டுமெனில், மக்களிடம் சென்று எது சரி, எது பிழை என்பதை, எப்படியான அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்பதை  நேர்மையுடன் சொல்லியிருந்திருக்க வேண்டும்.

ஆனால் , அதற்குப் பதிலாக நீங்கள் இப்போது செய்ததெல்லாம் (மீண்டும் புத்தர் சிலையை அதே இடத்தில் நிறுவியமை), நீங்கள் (இனவாதிகள் இல்லை என) சொன்னதை நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கும் உங்களுக்கு வாக்களித்த  சிங்களவரல்லாத  வாக்காளருக்கும் முழுமையான தூரோகத்தை இழைத்திருக்கின்றீர்கள் என்றார்.

வாக்களித்த தமிழருக்கு முழுத் துரோகத்தை இழைத்துள்ளீர்கள் சபையில் கஜேந்திரகுமார் எம்.பி சீற்றம் உங்களை நம்பி, நீங்கள் சொன்னதையெல்லாம் நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்திருக்கின்றீர்கள்.என  தேசிய மக்கள் சக்தி அரசைக் கடுமையாகச் சாடி இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் நீதி அமைச்சு மீதான விவாதத்தின்போது திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக பெளத்த வணக்கஸ்தலம் அமைக்கப்பட்டு வருகின்றமைக்கும் அங்கு அடாத்தாகப் புத்தர் சிலை நிறுவப்பட்டமைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து உரையாற்றும்போதே கஜேந்திரகுமார்  எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் உரையாற்றுகையில்"திருகோணமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்று இரவு அகற்றிய போது சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை.ஏனெனில் இனவாதத்தையும் மதவாதத்தையும் நீக்குவதாக நீங்கள் சொன்னதை நம்பி அவர்கள் உங்களுக்கே வாக்களித்திருந்தார்கள்.இங்கிருக்கும் திருகோணமலைக்கான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரையும் அவர்கள் தெரிவு செய்திருந்தார்கள்.நீங்கள் நேற்று இரவு எடுத்த நடவடிக்கையை எதிர்த்ததெல்லாம் சிங்களக் காடையர்கள் மட்டுமே.அதைக்கண்டு நீங்கள் உண்மையில் பின்வாங்கியிருந்திருக்கக்கூடாது. அந்த இனவாத - மதவாத காடைத்தனத்தைக் கண்டு பின்வாங்கியிருந்திருக்கக்கூடாது.உண்மையில் நீங்கள் என்ன செய்திருக்கவேண்டுமெனில், மக்களிடம் சென்று எது சரி, எது பிழை என்பதை, எப்படியான அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்பதை  நேர்மையுடன் சொல்லியிருந்திருக்க வேண்டும்.ஆனால் , அதற்குப் பதிலாக நீங்கள் இப்போது செய்ததெல்லாம் (மீண்டும் புத்தர் சிலையை அதே இடத்தில் நிறுவியமை), நீங்கள் (இனவாதிகள் இல்லை என) சொன்னதை நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கும் உங்களுக்கு வாக்களித்த  சிங்களவரல்லாத  வாக்காளருக்கும் முழுமையான தூரோகத்தை இழைத்திருக்கின்றீர்கள் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement