• Apr 21 2025

திருமணமாகி 9 நாட்களில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்: நடந்தது என்ன?

Sharmi / Apr 19th 2025, 1:37 pm
image

மட்டக்களப்பில் இடம்பெற்ற  மோட்டார் சைக்கிள் விபத்தில்  திருமணமாகி 9 நாட்களேயான இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சந்திவெளி பிரதான வீதியில் சந்தைக்கு முன்பாக நேற்றையதினம்(18) மாலை 5 மணியளவில் இரண்டு மோட்டர் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இவ்  விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் சந்திவெளியைச்சேர்ந்த 27 வயதான வடிவேல் மோகன சாந்தன் எனும் இளம் குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த 9 தினங்களுக்கு முன்தான் குறித்த இளைஞன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதேவேளை குறித்த விபத்தில் சிக்கிய மற்றைய இளைஞனும் கை கால்களில் பலத்த காயத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுக்கின்றனர்

சமூக சேவை சார்ந்த செயற்பாடுகளில் சிறு வயது முதல் ஈடுபாடுள்ள குறித்த இளைஞன் சந்திவெளியில் நேற்றிரவு(18) இடம்பெறவிருந்த கரப்பந்தாட்ட நிகழ்வில் கலந்து கொள்வோருக்காக வெதுப்பகமொன்றில் உணவினைக் கொள்வனவு செய்ய வந்த போதே விபத்தில் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.





திருமணமாகி 9 நாட்களில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்: நடந்தது என்ன மட்டக்களப்பில் இடம்பெற்ற  மோட்டார் சைக்கிள் விபத்தில்  திருமணமாகி 9 நாட்களேயான இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சந்திவெளி பிரதான வீதியில் சந்தைக்கு முன்பாக நேற்றையதினம்(18) மாலை 5 மணியளவில் இரண்டு மோட்டர் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இவ்  விபத்து இடம்பெற்றுள்ளது.இவ்விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சந்திவெளியைச்சேர்ந்த 27 வயதான வடிவேல் மோகன சாந்தன் எனும் இளம் குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.கடந்த 9 தினங்களுக்கு முன்தான் குறித்த இளைஞன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை குறித்த விபத்தில் சிக்கிய மற்றைய இளைஞனும் கை கால்களில் பலத்த காயத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுக்கின்றனர்சமூக சேவை சார்ந்த செயற்பாடுகளில் சிறு வயது முதல் ஈடுபாடுள்ள குறித்த இளைஞன் சந்திவெளியில் நேற்றிரவு(18) இடம்பெறவிருந்த கரப்பந்தாட்ட நிகழ்வில் கலந்து கொள்வோருக்காக வெதுப்பகமொன்றில் உணவினைக் கொள்வனவு செய்ய வந்த போதே விபத்தில் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement