• Feb 21 2025

கொழும்பில் இளம் குடும்பஸ்தர் கொடூரமாக கொலை

Chithra / Feb 19th 2025, 9:11 am
image


கொழும்பு- கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளூமெண்டல் பகுதியில், நபரொருவர் கூரிய ஆயதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 22 வயதுடைய மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைக்கான காரணம் மற்றும் கொலை செய்தவர்கள் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வௌியாகவில்லை என கூறப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், மரணமடைந்த நபருக்கு நேற்றிரவு தொலைபேசி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, மனைவியுடன் புளூமெண்டல் தொடருந்து வீதிக்கு அருகில் சென்றுள்ளார்.

இதன்போது அங்கிருந்த சிலர் அவரை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மோட்டார் சைக்கிளில் வருகைதந்த சிலர் கூரிய ஆயதத்தினால் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.


 

கொழும்பில் இளம் குடும்பஸ்தர் கொடூரமாக கொலை கொழும்பு- கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளூமெண்டல் பகுதியில், நபரொருவர் கூரிய ஆயதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் 22 வயதுடைய மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொலைக்கான காரணம் மற்றும் கொலை செய்தவர்கள் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வௌியாகவில்லை என கூறப்பட்டுள்ளது.கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.இதனடிப்படையில், மரணமடைந்த நபருக்கு நேற்றிரவு தொலைபேசி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, மனைவியுடன் புளூமெண்டல் தொடருந்து வீதிக்கு அருகில் சென்றுள்ளார்.இதன்போது அங்கிருந்த சிலர் அவரை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மோட்டார் சைக்கிளில் வருகைதந்த சிலர் கூரிய ஆயதத்தினால் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement