• Dec 28 2024

யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!

Chithra / Dec 27th 2024, 1:29 pm
image

 

யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது, கைதடி மேற்கு, கைதடி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவருக்கு கடந்த 23ஆம் திகதி காய்ச்சல் ஆரம்பித்தது. இந்நிலையில், சிகிச்சைக்காக 24ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். 

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்  யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதன்போது, கைதடி மேற்கு, கைதடி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,இவருக்கு கடந்த 23ஆம் திகதி காய்ச்சல் ஆரம்பித்தது. இந்நிலையில், சிகிச்சைக்காக 24ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement