• Dec 28 2024

உள்ளூர் உற்பத்தி அரிசி போதிய கையிருப்பில்: விலையில் மாற்றங்கள் இல்லை!

Chithra / Dec 27th 2024, 1:35 pm
image

 

உள்ளூர் உற்பத்தி அரிசி இனங்கள் போதிய அளவு கையிருப்பில் இருக்கின்றது. விலையில் மாற்றங்கள் இல்லை.  தென்னிலங்கை மாவட்டங்களில் இருந்து வடமாகாணத்திற்கு வரும் அரிசியினை விற்கமுடியாது என யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் ப.ஜெயசேகரம்  தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில், யாழ்ப்பாணம் மாவட்ட மொத்த - சில்லறை அரிசி வியாபாரிகளுடன் விலை நிர்ணய கட்டுப்பாடு தொடர்பிலான  கலந்துரையாடல் நேற்று  யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் யாழ்ப்பாணம் வணிகர் கழக தலைவர் ப.ஜெயசேகரம் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுவாக அரிசி விலை தொடர்பாக கடந்த திங்கட்கிழமை (09)ம் திகதி இலங்கை அரசாங்கத்தினால்  வர்த்தமானி  வெளியிடப்பட்டு உள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட அரிசி மீண்டும் வடமாகாணத்திற்கு வருகின்றது.

உள்ளூர் உற்பத்தி அரிசி இனங்கள் போதியளவு கையிருப்பில் இருக்கின்றது. விலையில் மாற்றங்கள் இல்லை. உள்ளூர் மக்கள் பாவிக்கின்ற அரிசியை எந்த விதமான தட்டுபாடும் இன்றி கொள்வனவு செய்து கொள்ளமுடியும். 

வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வெள்ளைப் பச்சை அரிசி, சம்பா இன அரிசிகள் பாரிய பிரச்சனையாக இருக்கின்றது.

அரசாங்கம் ஒரு விலையினை நிர்ணயம் செய்துள்ளனர். அதில் மொத்த, சில்லறை வியாபாரிகள் விற்கமுடியாத சூழ் நிலையில் இருக்கின்றனர்.

மொத்த வியாபார விலையாக  ஒரு கிலோ  வெள்ளைப் பச்சை, அல்லது சம்பா இன அரிசிகள் 215 ரூபாவாக விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது. சில்லறை விலையாக 220 ரூபா நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதாக இருந்தால் கிலோவுக்கு 05 ரூபா செலவாகின்றது. அதனை விட கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் எற்றி - இறக்க 01ரூபா செலவாகின்றது. 

போக்குவரத்து செலவினமாக  மொத்தமாக 06 ரூபா செலவாகின்றது. மொத்த - சில்லறை வியாபாரிகள் இலாபமாக 04 ரூபாவினை எதிர்பார்க்கின்றனர்.

கொழும்பு - யாழ்ப்பாணத்திற்கு இடையில் அரிசியினை எற்றி - இறக்க போக்குவரத்து செலவினங்கள் உள்ளிட்ட இலாபமாக 10 ரூபாவினை எதிர்பார்க்கின்றனர். 

அரசாங்கம் 05 ரூபா தான் விலையினை உறுதி செய்துள்ளது. இதன் அடிப்படையிலே வியாபாரிகள் எமக்கு முறைப்பாடு செய்ததன் பின்னர் சில்லறை - மொத்த வியாபாரிகளை அழைத்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

வெளி மாவட்டங்களில் இருந்து  வடமாகாணத்திற்கு வரும் அரிசியினை விற்கமுடியாது. இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்புடன் கதைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவருடன் கதைத்தோம். இதன்போது அவர், எனக்கு இந்த பிரச்சினை விளங்கியுள்ளது. 

இதனை அமைச்சு தான் தீர்மானித்துள்ளது. எனவே அவர்களுடன் நீங்கள் தொடர்புகொண்டு கதையுங்கள் என்றார்.

அந்தவகையில் நாங்கள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சருடன் தொடர்புகொண்டோம். இதன்போது அவரும் இந்த பிரச்சினையை ஏற்றுகொண்டார். 

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஒரு கடித்தத்தை அனுப்பி வைத்த பின்னர் அதன் பிரதியை தமக்கு அனுப்புமாறு கூறினார். ஆகையால் நாங்கள் கடிதம் எழுத தீர்மானித்துள்ளோம் என்றார்.


உள்ளூர் உற்பத்தி அரிசி போதிய கையிருப்பில்: விலையில் மாற்றங்கள் இல்லை  உள்ளூர் உற்பத்தி அரிசி இனங்கள் போதிய அளவு கையிருப்பில் இருக்கின்றது. விலையில் மாற்றங்கள் இல்லை.  தென்னிலங்கை மாவட்டங்களில் இருந்து வடமாகாணத்திற்கு வரும் அரிசியினை விற்கமுடியாது என யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் ப.ஜெயசேகரம்  தெரிவித்தார்.யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில், யாழ்ப்பாணம் மாவட்ட மொத்த - சில்லறை அரிசி வியாபாரிகளுடன் விலை நிர்ணய கட்டுப்பாடு தொடர்பிலான  கலந்துரையாடல் நேற்று  யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் இடம்பெற்றது.இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் யாழ்ப்பாணம் வணிகர் கழக தலைவர் ப.ஜெயசேகரம் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,பொதுவாக அரிசி விலை தொடர்பாக கடந்த திங்கட்கிழமை (09)ம் திகதி இலங்கை அரசாங்கத்தினால்  வர்த்தமானி  வெளியிடப்பட்டு உள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட அரிசி மீண்டும் வடமாகாணத்திற்கு வருகின்றது.உள்ளூர் உற்பத்தி அரிசி இனங்கள் போதியளவு கையிருப்பில் இருக்கின்றது. விலையில் மாற்றங்கள் இல்லை. உள்ளூர் மக்கள் பாவிக்கின்ற அரிசியை எந்த விதமான தட்டுபாடும் இன்றி கொள்வனவு செய்து கொள்ளமுடியும். வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வெள்ளைப் பச்சை அரிசி, சம்பா இன அரிசிகள் பாரிய பிரச்சனையாக இருக்கின்றது.அரசாங்கம் ஒரு விலையினை நிர்ணயம் செய்துள்ளனர். அதில் மொத்த, சில்லறை வியாபாரிகள் விற்கமுடியாத சூழ் நிலையில் இருக்கின்றனர்.மொத்த வியாபார விலையாக  ஒரு கிலோ  வெள்ளைப் பச்சை, அல்லது சம்பா இன அரிசிகள் 215 ரூபாவாக விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது. சில்லறை விலையாக 220 ரூபா நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது.கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதாக இருந்தால் கிலோவுக்கு 05 ரூபா செலவாகின்றது. அதனை விட கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் எற்றி - இறக்க 01ரூபா செலவாகின்றது. போக்குவரத்து செலவினமாக  மொத்தமாக 06 ரூபா செலவாகின்றது. மொத்த - சில்லறை வியாபாரிகள் இலாபமாக 04 ரூபாவினை எதிர்பார்க்கின்றனர்.கொழும்பு - யாழ்ப்பாணத்திற்கு இடையில் அரிசியினை எற்றி - இறக்க போக்குவரத்து செலவினங்கள் உள்ளிட்ட இலாபமாக 10 ரூபாவினை எதிர்பார்க்கின்றனர். அரசாங்கம் 05 ரூபா தான் விலையினை உறுதி செய்துள்ளது. இதன் அடிப்படையிலே வியாபாரிகள் எமக்கு முறைப்பாடு செய்ததன் பின்னர் சில்லறை - மொத்த வியாபாரிகளை அழைத்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.வெளி மாவட்டங்களில் இருந்து  வடமாகாணத்திற்கு வரும் அரிசியினை விற்கமுடியாது. இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்புடன் கதைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.அந்தவகையில் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவருடன் கதைத்தோம். இதன்போது அவர், எனக்கு இந்த பிரச்சினை விளங்கியுள்ளது. இதனை அமைச்சு தான் தீர்மானித்துள்ளது. எனவே அவர்களுடன் நீங்கள் தொடர்புகொண்டு கதையுங்கள் என்றார்.அந்தவகையில் நாங்கள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சருடன் தொடர்புகொண்டோம். இதன்போது அவரும் இந்த பிரச்சினையை ஏற்றுகொண்டார். நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஒரு கடித்தத்தை அனுப்பி வைத்த பின்னர் அதன் பிரதியை தமக்கு அனுப்புமாறு கூறினார். ஆகையால் நாங்கள் கடிதம் எழுத தீர்மானித்துள்ளோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement