• Nov 22 2024

புதுக்குடியிருப்பில் இளம் குடும்ப பெண் சடலமாக மீட்பு...!samugammedia

Sharmi / Feb 10th 2024, 2:32 pm
image

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளம் குடும்பப் பெண்  இன்று(10) காலை,  கிணற்றிலிருந்து  சடலமாக  மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒன்பதாம் வட்டார பகுதியில் வசித்து வரும் குறித்த பெண்,  குழந்தை ஒன்றை பிரசவித்த நிலையில் கடந்த 11 நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்றையதினம்(09) குறித்த பெண் வீடு திரும்பிய நிலையில் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளை நள்ளிரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

அதேவேளை, குறித்த பெண்ணை காணவில்லை என வீட்டார் மற்றும் அயலவர்கள் கிராமத்தவர்கள் இணைந்து தேடுதல் நடாத்தியும் எங்கும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இன்று காலை 8 மணியளவில் வீட்டு கிணற்றுக்குள் சடலமாக இருப்பதனை அவதானித்த குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர் .

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் 29 வயதுடைய குடும்பப் பெண்ணே  இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, இவ் வழக்கானது எதிர்வரும் பங்குனி 5ஆம் திகதி மரண விசாரணைக்காக எடுத்து கொள்ளப்படும் எனவும், இவ் மரணம் தொடர்பில் யாரும் சாட்சி சொல்ல விரும்பினால் நீதிமன்றத்திற்கு வருகை தந்து சாட்சியம் அளிக்கலாம் எனவும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முகமட் தெரிவிக்கப்பட்டதுடன் மரண பரிசோதனையின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.



புதுக்குடியிருப்பில் இளம் குடும்ப பெண் சடலமாக மீட்பு.samugammedia புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளம் குடும்பப் பெண்  இன்று(10) காலை,  கிணற்றிலிருந்து  சடலமாக  மீட்கப்பட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒன்பதாம் வட்டார பகுதியில் வசித்து வரும் குறித்த பெண்,  குழந்தை ஒன்றை பிரசவித்த நிலையில் கடந்த 11 நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்றையதினம்(09) குறித்த பெண் வீடு திரும்பிய நிலையில் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளை நள்ளிரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.அதேவேளை, குறித்த பெண்ணை காணவில்லை என வீட்டார் மற்றும் அயலவர்கள் கிராமத்தவர்கள் இணைந்து தேடுதல் நடாத்தியும் எங்கும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இன்று காலை 8 மணியளவில் வீட்டு கிணற்றுக்குள் சடலமாக இருப்பதனை அவதானித்த குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர் .இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்தில் 29 வயதுடைய குடும்பப் பெண்ணே  இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அதேவேளை, இவ் வழக்கானது எதிர்வரும் பங்குனி 5ஆம் திகதி மரண விசாரணைக்காக எடுத்து கொள்ளப்படும் எனவும், இவ் மரணம் தொடர்பில் யாரும் சாட்சி சொல்ல விரும்பினால் நீதிமன்றத்திற்கு வருகை தந்து சாட்சியம் அளிக்கலாம் எனவும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முகமட் தெரிவிக்கப்பட்டதுடன் மரண பரிசோதனையின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement