• Apr 19 2026

மூச்செடுக்க சிரமப்பட்ட சிறுமி பரிதாபமாக பலி; யாழில் சோகச் சம்பவம்

Chithra / Oct 22nd 2025, 7:33 pm
image


யாழ்ப்பாணத்தில், மூச்செடுக்க சிரமப்பட்ட சிறுமி ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியைச் சேர்ந்த 07 வயதுடைய நவயோகன் ரிஹானா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த சிறுமி நேற்று (21) மாலை சுவாசிப்பதற்கு சிரமப்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். 

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவே உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். 

வலிப்புடன், நுரையீரலில் ஏற்பட்ட கிருமித்தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

மூச்செடுக்க சிரமப்பட்ட சிறுமி பரிதாபமாக பலி; யாழில் சோகச் சம்பவம் யாழ்ப்பாணத்தில், மூச்செடுக்க சிரமப்பட்ட சிறுமி ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியைச் சேர்ந்த 07 வயதுடைய நவயோகன் ரிஹானா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த சிறுமி நேற்று (21) மாலை சுவாசிப்பதற்கு சிரமப்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவே உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். வலிப்புடன், நுரையீரலில் ஏற்பட்ட கிருமித்தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement