• Sep 08 2024

இளம் ஊடகவியலாளர் மாரடைப்பால் உயிரிழப்பு

Chithra / Jul 25th 2024, 3:30 pm
image

Advertisement


ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா இசைப்பிரியன் (வயது 38) இன்று காலை யாழ்ப்பாணத்தில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 

வவுனியாவை சேர்ந்த இவர் சுயாதீன ஊடகவியலாளராகவும், பத்திரிகைஎழுத்தாளராகவும், அரசியல் விமர்சகராகவும், கலைஞனாகவும் பல்துறையில் பயணித்தவர். 

வன்னியில் புனிதபூமி சிறுவர் இல்லத்தில் வளர்ந்து பாடசாலைப் படிப்பையும் முடித்து நிதர்சனத்தில் பணி புரிந்துள்ளார்.

வடபோர்முனை பயிற்சி ஆசிரியராக இருந்து இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்ட செஞ்சுடரின் சகோதரரும் ஆவார். 

இசைப்பிரியனின் தாயார் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயால் காலமாகி விட்டார்.

நிமிர்வு, சமூகம் ஊடகம், எழுநா உள்ளிட்ட ஊடகங்களிலும் ஊடகவியலாளராகவும் பணியாற்றியுள்ளார். 

ஊடகப் பணிகளை அர்ப்பணிப்புடனும், ஈடுபாட்டுடனும் செய்யும்  இவரின் திடீர் இழப்பு ஊடகப்பரப்பில்  பேரதிர்ச்சியாக இருக்கிறது.

இளம் ஊடகவியலாளர் மாரடைப்பால் உயிரிழப்பு ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா இசைப்பிரியன் (வயது 38) இன்று காலை யாழ்ப்பாணத்தில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். வவுனியாவை சேர்ந்த இவர் சுயாதீன ஊடகவியலாளராகவும், பத்திரிகைஎழுத்தாளராகவும், அரசியல் விமர்சகராகவும், கலைஞனாகவும் பல்துறையில் பயணித்தவர். வன்னியில் புனிதபூமி சிறுவர் இல்லத்தில் வளர்ந்து பாடசாலைப் படிப்பையும் முடித்து நிதர்சனத்தில் பணி புரிந்துள்ளார்.வடபோர்முனை பயிற்சி ஆசிரியராக இருந்து இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்ட செஞ்சுடரின் சகோதரரும் ஆவார். இசைப்பிரியனின் தாயார் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயால் காலமாகி விட்டார்.நிமிர்வு, சமூகம் ஊடகம், எழுநா உள்ளிட்ட ஊடகங்களிலும் ஊடகவியலாளராகவும் பணியாற்றியுள்ளார். ஊடகப் பணிகளை அர்ப்பணிப்புடனும், ஈடுபாட்டுடனும் செய்யும்  இவரின் திடீர் இழப்பு ஊடகப்பரப்பில்  பேரதிர்ச்சியாக இருக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement