• Nov 19 2024

வாக்குச்சீட்டை கிழித்த இளைஞனால் பதற்றம் - யாழ். வாக்களிப்பு நிலையத்தில் சம்பவம்

Chithra / Sep 21st 2024, 2:11 pm
image

யாழ்ப்பாணம் - நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் வாக்களிக்க சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டை கிழித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இடம்பெற்றுவரும் நிலையில், வாக்கெடுப்பு உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட வாக்குச் சீட்டையே குறித்த இளைஞர் இரண்டாக கிழித்துள்ளார்.

நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் இன்றைய தினம் வாக்களிக்கச் சென்ற இளைஞர், தனது வாக்காளர் அட்டையை காண்பித்து அடையாளத்தை உறுதிப்படுத்தி, வாக்குச்சீட்டினை கைகளில் பெற்ற பின்னர், வாக்களிக்காமல், வாக்குச்சீட்டினை கிழித்துள்ளார். 

அதனை அங்கிருந்த அதிகாரிகள் கவனித்து, பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, பொலிஸார் இளைஞரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின்போது, அந்த இளைஞர் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என தெரியவந்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கமைய அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 


வாக்குச்சீட்டை கிழித்த இளைஞனால் பதற்றம் - யாழ். வாக்களிப்பு நிலையத்தில் சம்பவம் யாழ்ப்பாணம் - நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் வாக்களிக்க சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டை கிழித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இடம்பெற்றுவரும் நிலையில், வாக்கெடுப்பு உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட வாக்குச் சீட்டையே குறித்த இளைஞர் இரண்டாக கிழித்துள்ளார்.நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் இன்றைய தினம் வாக்களிக்கச் சென்ற இளைஞர், தனது வாக்காளர் அட்டையை காண்பித்து அடையாளத்தை உறுதிப்படுத்தி, வாக்குச்சீட்டினை கைகளில் பெற்ற பின்னர், வாக்களிக்காமல், வாக்குச்சீட்டினை கிழித்துள்ளார். அதனை அங்கிருந்த அதிகாரிகள் கவனித்து, பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, பொலிஸார் இளைஞரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞரிடம் பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின்போது, அந்த இளைஞர் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கமைய அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement