• Sep 29 2024

நிதி திரட்டும் நோக்கில் தலைகீழாக நடந்து சாகசம் படைக்கவுள்ள இளைஞர்கள்- குவியும் பாராட்டுக்கள்! SamugamMedia

Tamil nila / Mar 1st 2023, 5:53 pm
image

Advertisement

நிதி திரட்டுவதற்காக பலரும்  நடனமாடுவது, நிகழ்ச்சிகள் நடத்துவது எனப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவது வழமையானது.ஆனால் சற்று வித்தியாசமாக சில இளைஞர்கள்  3 கிலோமீட்டர் தூரம் வரையிலும்  தலைகீழாக நடந்து நிதி திரட்ட தீர்மானித்துள்ளனர். இந்த முயற்சி சிங்கப்பூரில் 

அரங்கேரவுள்ளது. 


அந்த முயற்சியில் ஈடுபடவுள்ள   இளைஞர்களில்  ஒருவரான  நீவன் ராஜ் என்பவர் தெரிவிக்கையில், 3 கிலோமீட்டர் தூரம் கைகளில் நடப்பதற்கு  சுமார் 4 முதல் 6 மணிநேரம் எடுக்கலாம் என்று 

குறிப்பிட்டுள்ளார். 


அத்துடன் தலை கீழாக நடப்பது " சுலபம் அல்ல. ஆனால் அந்த வலியையும் தாண்டி எங்கள் ஆதரவைக் காட்ட விரும்புகின்றோம் எனவும் அதன் மூலம் திரட்டப்படும் நன்கொடையானது  இரு தரப்பினருக்கு வழங்கப்படும் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார். 


தசை வலுவிழப்பை ஏற்படுத்தும் type two spinal muscular atrophy என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ள  ஒரு வயது நிரம்பிய ஷாமல் மற்றும் அண்மையில்  திருமணமான சாலை விபத்தில் தனது  குடும்பத்தினை இழந்த  பெண்ணிற்குமே திரட்டும் நிதிகளை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 


 அத்தோடு இதுவரை காலத்தில்  3 கிலோமீட்டர் தூரம் தலைகீழாக நடந்தது இல்லை எனவும்

 "தனது நண்பர்களும் தானும்  சுமார் 10 ஆண்டுகளாகச் சீருடற்பயிற்சியையும் (gymnastics) பார்க்கரையும் (parkour) பயிற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இசையுடனும் நண்பர்களின் துணையுடனும் சாகசத்தைப் புரிந்துவிடலாம் என்று மேலும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அத்துடன்,சிங்கப்பூர்  ஸ்டேடியத்தில்  மார்ச் 2 ஆம் திகதி  காலை 8.30 மணியளவில் தலைகீழாக நடக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவர்களது இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.

நிதி திரட்டும் நோக்கில் தலைகீழாக நடந்து சாகசம் படைக்கவுள்ள இளைஞர்கள்- குவியும் பாராட்டுக்கள் SamugamMedia நிதி திரட்டுவதற்காக பலரும்  நடனமாடுவது, நிகழ்ச்சிகள் நடத்துவது எனப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவது வழமையானது.ஆனால் சற்று வித்தியாசமாக சில இளைஞர்கள்  3 கிலோமீட்டர் தூரம் வரையிலும்  தலைகீழாக நடந்து நிதி திரட்ட தீர்மானித்துள்ளனர். இந்த முயற்சி சிங்கப்பூரில் அரங்கேரவுள்ளது. அந்த முயற்சியில் ஈடுபடவுள்ள   இளைஞர்களில்  ஒருவரான  நீவன் ராஜ் என்பவர் தெரிவிக்கையில், 3 கிலோமீட்டர் தூரம் கைகளில் நடப்பதற்கு  சுமார் 4 முதல் 6 மணிநேரம் எடுக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தலை கீழாக நடப்பது " சுலபம் அல்ல. ஆனால் அந்த வலியையும் தாண்டி எங்கள் ஆதரவைக் காட்ட விரும்புகின்றோம் எனவும் அதன் மூலம் திரட்டப்படும் நன்கொடையானது  இரு தரப்பினருக்கு வழங்கப்படும் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார். தசை வலுவிழப்பை ஏற்படுத்தும் type two spinal muscular atrophy என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ள  ஒரு வயது நிரம்பிய ஷாமல் மற்றும் அண்மையில்  திருமணமான சாலை விபத்தில் தனது  குடும்பத்தினை இழந்த  பெண்ணிற்குமே திரட்டும் நிதிகளை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  அத்தோடு இதுவரை காலத்தில்  3 கிலோமீட்டர் தூரம் தலைகீழாக நடந்தது இல்லை எனவும் "தனது நண்பர்களும் தானும்  சுமார் 10 ஆண்டுகளாகச் சீருடற்பயிற்சியையும் (gymnastics) பார்க்கரையும் (parkour) பயிற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இசையுடனும் நண்பர்களின் துணையுடனும் சாகசத்தைப் புரிந்துவிடலாம் என்று மேலும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அத்துடன்,சிங்கப்பூர்  ஸ்டேடியத்தில்  மார்ச் 2 ஆம் திகதி  காலை 8.30 மணியளவில் தலைகீழாக நடக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவர்களது இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement