• Feb 27 2026

கைவிடப்பட்ட படகில் இளம் பெண் சடலமாக மீட்பு! கோடாரியால் ஒருவர் வெட்டிக் கொலை! இலங்கையில் பயங்கரம்

Chithra / Feb 26th 2026, 9:40 am
image


கொழும்பு - கல்கிஸ்ஸை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த மீன்பிடி படகு ஒன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.


நேற்று மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.


உயிரிழந்தவர் இரத்மலானை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


குறித்த பெண்ணின் மரணம் சந்தேகத்திற்குரியது என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், கல்கிஸ்ஸை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


இதேவேளை

கம்பஹா - மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் கோடாரியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.


நேற்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவத்தில் உயிரிழந்தவர் பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இருவருக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக, சந்தேகநபர் தனது வீட்டிலேயே மற்றுமொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தவரை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சம்பவத்துடன் தொடர்புடைய இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

கைவிடப்பட்ட படகில் இளம் பெண் சடலமாக மீட்பு கோடாரியால் ஒருவர் வெட்டிக் கொலை இலங்கையில் பயங்கரம் கொழும்பு - கல்கிஸ்ஸை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த மீன்பிடி படகு ஒன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.நேற்று மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.உயிரிழந்தவர் இரத்மலானை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த பெண்ணின் மரணம் சந்தேகத்திற்குரியது என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், கல்கிஸ்ஸை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இதேவேளைகம்பஹா - மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் கோடாரியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் உயிரிழந்தவர் பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இருவருக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக, சந்தேகநபர் தனது வீட்டிலேயே மற்றுமொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தவரை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement