• Apr 29 2026

இன்ஸ்டகிராமில் மலர்ந்த காதலால் வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை; மாணவியை திருமணம் செய்வதாக கூறிய பின் இளைஞர் தலைமறைவு!

shanu / Oct 7th 2025, 9:19 pm
image

இன்ஸ்டகிராமில் மலர்ந்த காதலால் மாணவியை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் மாணவி திருமணம் செய்யுமாறு கேட்ட பின்னர் திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்து தலைமறைவாகியுள்ளார். 


திண்டுக்கல், மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சிலுக்குவார்பட்டி ஆரோக்கிய நகரைச் சேர்ந்தவர் ஜோஸ் மரிய ராகுல் (வயது 28). இவர் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் மாணவி ஒருவருடன் பழகி வந்தார். 


தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த அந்த கல்லூரி மாணவி பெற்றோரை இழந்த நிலையில் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.


இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் திருமணத்துக்கு உங்கள் வீட்டில் சம்மதிப்பார்களா? என கல்லூரி மாணவி கேட்டுள்ளார். அதற்கு அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். 


இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி வைகை அணைக்கு மாணவியை

வரவழைத்துள்ளார். அங்குள்ள பூங்காவை சுற்றிப்பார்த்த பின்பு கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார்.


அதன் பிறகு மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை காட்டியே மாணவியை மிரட்டி அடிக்கடி உல்லாசம் அனுபவித்தார். 


அதன் பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவி அவரிடம் கேட்டபோது, தட்டிக் கழித்தார்.இதனால் தன்னை ஏமாற்ற நினைக்கிறாரோ என சந்தேகமடைந்த கல்லூரி மாணவி அவரது வீட்டுக்கு சென்று நியாயம் கேட்டார். 


அப்போது அவரது பெற்றோர்களும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, சமூகத்தை காரணம் காட்டி  உன்னை எங்கள் மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டோம். எனது மகனுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க உள்ளோம் என தெரிவித்தனர். 


இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி ஆண்டிபட்டி  மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 


முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மாணவியை பலாத்காரம் செய்து திருமணத்துக்கு மறுத்த  குறித்த இளைஞர் மற்றும் அவரது பெற்றோரை தேடி வருகின்றனர்.

இன்ஸ்டகிராமில் மலர்ந்த காதலால் வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை; மாணவியை திருமணம் செய்வதாக கூறிய பின் இளைஞர் தலைமறைவு இன்ஸ்டகிராமில் மலர்ந்த காதலால் மாணவியை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் மாணவி திருமணம் செய்யுமாறு கேட்ட பின்னர் திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்து தலைமறைவாகியுள்ளார். திண்டுக்கல், மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சிலுக்குவார்பட்டி ஆரோக்கிய நகரைச் சேர்ந்தவர் ஜோஸ் மரிய ராகுல் (வயது 28). இவர் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் மாணவி ஒருவருடன் பழகி வந்தார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த அந்த கல்லூரி மாணவி பெற்றோரை இழந்த நிலையில் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் திருமணத்துக்கு உங்கள் வீட்டில் சம்மதிப்பார்களா என கல்லூரி மாணவி கேட்டுள்ளார். அதற்கு அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி வைகை அணைக்கு மாணவியைவரவழைத்துள்ளார். அங்குள்ள பூங்காவை சுற்றிப்பார்த்த பின்பு கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார்.அதன் பிறகு மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை காட்டியே மாணவியை மிரட்டி அடிக்கடி உல்லாசம் அனுபவித்தார். அதன் பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவி அவரிடம் கேட்டபோது, தட்டிக் கழித்தார்.இதனால் தன்னை ஏமாற்ற நினைக்கிறாரோ என சந்தேகமடைந்த கல்லூரி மாணவி அவரது வீட்டுக்கு சென்று நியாயம் கேட்டார். அப்போது அவரது பெற்றோர்களும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, சமூகத்தை காரணம் காட்டி  உன்னை எங்கள் மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டோம். எனது மகனுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க உள்ளோம் என தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி ஆண்டிபட்டி  மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மாணவியை பலாத்காரம் செய்து திருமணத்துக்கு மறுத்த  குறித்த இளைஞர் மற்றும் அவரது பெற்றோரை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement