ஒன்லைன் மூலம் 45000 ரூபா பெறுமதியான பொருளை கொள்வனவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒன்லைன் மூலம் கொள்வனவு செய்த பொருளை பெற்றுக்கொண்டு அதற்குரிய பணம் வழங்காது இளைஞன் தப்பி ஓடியதாக கடந்த புதன்கிழமை (20) முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிகாட்டலில் செயற்பட்ட பல்வேறு முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரி எம்.எச்.எம்.ஹசீப் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சம்மாந்துறை 01 பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனை கைது செய்தனர்.
இதன் போது கைதான இளைஞனிடம் இருந்து ஒன்லைன் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருள்கள் இன்று (22) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் சட்டநடவடிக்கைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டது.
ஒன்லைன் மூலம் 45000 ரூபா பெறுமதியில் பொருட்கள் கொள்வனவு; அம்பாறையில் இளைஞன் கைது ஒன்லைன் மூலம் 45000 ரூபா பெறுமதியான பொருளை கொள்வனவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒன்லைன் மூலம் கொள்வனவு செய்த பொருளை பெற்றுக்கொண்டு அதற்குரிய பணம் வழங்காது இளைஞன் தப்பி ஓடியதாக கடந்த புதன்கிழமை (20) முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.இதற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிகாட்டலில் செயற்பட்ட பல்வேறு முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரி எம்.எச்.எம்.ஹசீப் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சம்மாந்துறை 01 பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனை கைது செய்தனர்.இதன் போது கைதான இளைஞனிடம் இருந்து ஒன்லைன் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருள்கள் இன்று (22) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் சட்டநடவடிக்கைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டது.