• Feb 01 2026

Thansita / Jun 14th 2025, 7:13 am
image

யாழில் 10 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் போது  போதை மாத்திரைகளை விற்பனை செய்ய வந்தவேளை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சந்தேகநபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது யாழில் 10 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் போது  போதை மாத்திரைகளை விற்பனை செய்ய வந்தவேளை கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.சந்தேகநபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement