• Nov 07 2025

நடிகர்களை மிஞ்சிய யூடியூப் பிரபலங்கள்; கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டிய டாப் 10 யூடியூபர்கள்!

shanuja / Oct 15th 2025, 12:41 pm
image

இந்தியாவில் முன்னணி நடிகர்களின் சொத்துமதிப்பையே மிஞ்சும் வகையிலாக  கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் டாப் 10 பணக்கார யூடியூபர்கள் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 


சினிமாவில் ஒரு படத்திற்கு கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் ஹீரோக்களுக்கு இனிமேல்  போட்டி என்ற வகையில் வெறும் கமரா முன் இருந்து பேசுறது, காமெடி பண்றது என சினிமா நட்சத்திரங்களை விட பல மடங்கு பணக்காரர்களாக உருவாகியிருப்பவர்களே கெண்டன்ட் கிறியேற்றர்ஸ் ஆன யூடியூபர்கள். 


காமெடி முதற்கொண்டு விளையாட்டு, தொழில்நுட்பம், சுவாரஸ்யம்  என அனைத்திலும் கலக்கும் தன்மய் பட் தான் பணக்கார இந்திய  யூடியூபர்களில் முதலிடத்தில் உள்ளார். இவர் சம்பாதித்த சொத்துமதிப்பு சுமார்  23275  கோடி ரூபாவாகும். இது பல முன்னணி நடிகர்களின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பை விட அதிகம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு வீடியோவிலேயே அதிக பார்வையாளர்களைக் கவர்பவராக தன்மய் பட் திகழ்கிறார். 


அடுத்து தொழில்நுட்பத்தில ஒரு பி.எச்.டி வாங்கலாம் என்று பேசப்படுகின்ற கௌரவ சௌத்ரி என்பவர் தான்  இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரின் சொத்துமதிப்பு சுமார் 12775  கோடி ரூபாவாகும். 


மூன்றாவது இடத்தில் உள்ளவர் சமய்ரைனா.  செஸ் விளையாட்டையும் காமெடியையும் இணைத்து புதிதான ஒரு பாதையில் பிரபலமாகியுள்ளார். இவரது கணக்கில் 4900  கோடி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 


இதேபோலலே காரிமினாட்டி என்பவர் 4585 கோடி ரூபா, புவன் வாங் 4270  கோடி ரூபா, நிச்சைமைல்கன் 2275  கோடி ரூபா என்ற வரிசையில் பலர் கோடி ரூபாக்களை யூடியூபில் சம்பாதித்து வருகின்றனர். 


சினிமா நடிகர்கள் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தை நம்பயுள்ள போது இந்த யூடியூப் ராஜாக்கள் தங்கள் அறைகளில் இருந்தபடியே உலகம் முழுவதும் இரசிகர்களைக் கவர்ந்து விளம்பரங்கள், பிரான்ட் ஒப்பந்தங்கள், லைவ்  ஸ்றீமிங் மூலமாக கோடிக் கணக்கான ரூபாக்களை சம்பாதித்து டிஜிற்றல் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளனர். 


கதை, திரைக்கதை ஒன்றுமில்லமால் தரமான கெண்டன்ட் இருந்தா போதும். சினிமாவில் வரும் இலாபத்தை விட யூடியூப்பில் அதிக இலாபத்தைப் பார்க்க முடியும் என்று பிரபல யூடியூபர்ஸ் நிரூபித்துள்ளனர்.

நடிகர்களை மிஞ்சிய யூடியூப் பிரபலங்கள்; கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டிய டாப் 10 யூடியூபர்கள் இந்தியாவில் முன்னணி நடிகர்களின் சொத்துமதிப்பையே மிஞ்சும் வகையிலாக  கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் டாப் 10 பணக்கார யூடியூபர்கள் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. சினிமாவில் ஒரு படத்திற்கு கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் ஹீரோக்களுக்கு இனிமேல்  போட்டி என்ற வகையில் வெறும் கமரா முன் இருந்து பேசுறது, காமெடி பண்றது என சினிமா நட்சத்திரங்களை விட பல மடங்கு பணக்காரர்களாக உருவாகியிருப்பவர்களே கெண்டன்ட் கிறியேற்றர்ஸ் ஆன யூடியூபர்கள். காமெடி முதற்கொண்டு விளையாட்டு, தொழில்நுட்பம், சுவாரஸ்யம்  என அனைத்திலும் கலக்கும் தன்மய் பட் தான் பணக்கார இந்திய  யூடியூபர்களில் முதலிடத்தில் உள்ளார். இவர் சம்பாதித்த சொத்துமதிப்பு சுமார்  23275  கோடி ரூபாவாகும். இது பல முன்னணி நடிகர்களின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பை விட அதிகம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு வீடியோவிலேயே அதிக பார்வையாளர்களைக் கவர்பவராக தன்மய் பட் திகழ்கிறார். அடுத்து தொழில்நுட்பத்தில ஒரு பி.எச்.டி வாங்கலாம் என்று பேசப்படுகின்ற கௌரவ சௌத்ரி என்பவர் தான்  இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரின் சொத்துமதிப்பு சுமார் 12775  கோடி ரூபாவாகும். மூன்றாவது இடத்தில் உள்ளவர் சமய்ரைனா.  செஸ் விளையாட்டையும் காமெடியையும் இணைத்து புதிதான ஒரு பாதையில் பிரபலமாகியுள்ளார். இவரது கணக்கில் 4900  கோடி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேபோலலே காரிமினாட்டி என்பவர் 4585 கோடி ரூபா, புவன் வாங் 4270  கோடி ரூபா, நிச்சைமைல்கன் 2275  கோடி ரூபா என்ற வரிசையில் பலர் கோடி ரூபாக்களை யூடியூபில் சம்பாதித்து வருகின்றனர். சினிமா நடிகர்கள் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தை நம்பயுள்ள போது இந்த யூடியூப் ராஜாக்கள் தங்கள் அறைகளில் இருந்தபடியே உலகம் முழுவதும் இரசிகர்களைக் கவர்ந்து விளம்பரங்கள், பிரான்ட் ஒப்பந்தங்கள், லைவ்  ஸ்றீமிங் மூலமாக கோடிக் கணக்கான ரூபாக்களை சம்பாதித்து டிஜிற்றல் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளனர். கதை, திரைக்கதை ஒன்றுமில்லமால் தரமான கெண்டன்ட் இருந்தா போதும். சினிமாவில் வரும் இலாபத்தை விட யூடியூப்பில் அதிக இலாபத்தைப் பார்க்க முடியும் என்று பிரபல யூடியூபர்ஸ் நிரூபித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement