• Apr 29 2026

விருந்தினரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற வீட்டு உரிமையாளர்-வாய் தர்க்கம் முற்றியதால் ஏற்பட்ட விபரீதம்!

Ziya / Feb 28th 2026, 3:40 pm
image

சாலியபுர - தெப்பங்குளம் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 


வீட்டு உரிமையாளருக்கும் வீட்டிற்கு வந்த ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில், வீட்டு உரிமையாளர் வீட்டிற்கு வந்தவர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளார். 


இந்தத் தாக்குதலினால் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


இவ்வாறு உயிரிழந்தவர் சாலியபுர பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடையவராவார். 


இச்சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 


அனுராதபுரம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


விருந்தினரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற வீட்டு உரிமையாளர்-வாய் தர்க்கம் முற்றியதால் ஏற்பட்ட விபரீதம் சாலியபுர - தெப்பங்குளம் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டு உரிமையாளருக்கும் வீட்டிற்கு வந்த ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில், வீட்டு உரிமையாளர் வீட்டிற்கு வந்தவர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலினால் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு உயிரிழந்தவர் சாலியபுர பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடையவராவார். இச்சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அனுராதபுரம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement