உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் உள்ள புகழ்பெற்ற ஜனேஷ்வர் மிஸ்ரா பூங்கா அருகே காதலனுக்கும் காதலிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், உயிரைப் பறிக்கும் அளவிலான ஆபத்தான சம்பவமாக மாறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவின் ஜனேஷ்வர் மிஸ்ரா பூங்கா பகுதியில், தன் காதலன் வேறொரு பெண்ணுடன் காரில் இருப்பதை அந்தப் பெண் நேரில் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக அந்த நபரை எதிர்கொண்ட பெண்ணுடன் காரில் இருந்தபடியே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. அங்கிருந்து காதலன் தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
காதலன் காரை நகர்த்த முயன்றபோது, அவரைத் தடுத்து நிறுத்த வேறு வழியின்றி அந்தப் பெண் காரின் முன்பகுதி மீது ஏறி நின்றுள்ளார்.
பெண் முன்பகுதியில் தொங்கிக் கொண்டிருந்தபோதிலும், இரக்கமின்றி அந்த நபர் காரை நிறுத்தாமல் தொடர்ந்து வேகமாகப் போயுள்ளார்.
காரின் வேகம் அதிகரித்ததால் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பெண் ஓடும் காரில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.
இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காரின் பதிவு எண்ணை (Vehicle Registration Number) வைத்துத் தப்பி ஓடிய காதலனை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மற்றொரு பெண்ணுடன் பார்த்ததால் வெடித்த மோதல்-காதலனை தடுக்க காரில் தொங்கிய காதலி உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் உள்ள புகழ்பெற்ற ஜனேஷ்வர் மிஸ்ரா பூங்கா அருகே காதலனுக்கும் காதலிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், உயிரைப் பறிக்கும் அளவிலான ஆபத்தான சம்பவமாக மாறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.லக்னோவின் ஜனேஷ்வர் மிஸ்ரா பூங்கா பகுதியில், தன் காதலன் வேறொரு பெண்ணுடன் காரில் இருப்பதை அந்தப் பெண் நேரில் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.உடனடியாக அந்த நபரை எதிர்கொண்ட பெண்ணுடன் காரில் இருந்தபடியே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. அங்கிருந்து காதலன் தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.காதலன் காரை நகர்த்த முயன்றபோது, அவரைத் தடுத்து நிறுத்த வேறு வழியின்றி அந்தப் பெண் காரின் முன்பகுதி மீது ஏறி நின்றுள்ளார்.பெண் முன்பகுதியில் தொங்கிக் கொண்டிருந்தபோதிலும், இரக்கமின்றி அந்த நபர் காரை நிறுத்தாமல் தொடர்ந்து வேகமாகப் போயுள்ளார்.காரின் வேகம் அதிகரித்ததால் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பெண் ஓடும் காரில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காரின் பதிவு எண்ணை (Vehicle Registration Number) வைத்துத் தப்பி ஓடிய காதலனை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.