• Apr 02 2025

இந்தியாவிலிருந்து இறக்குமதியான 10,000 மெற்றிக் தொன் அரசி!

Chithra / Dec 10th 2024, 8:26 am
image

 

இந்தியாவின் தூத்துக்குடியிலிருந்து தனியார் துறையினரால் இறக்குமதியான 10,000 மெற்றிக் தொன் அரசி நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்நிலையில், அரசாங்கம் முதற்கட்டமாக கொள்வனவு செய்யவுள்ள 5,200 மெற்றிக் தொன் அரிசி, எதிர்வரும்  திங்கட்கிழமை நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, இரண்டாம் கட்டமாக மேலும் 20,800 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு அரிசி இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் நாட்டரிசியே இவ்வாறு இறக்குமதி செய்யப்படவுள்ளது.

அதன் பின்னர் தேவைப்படும் போது ஏனைய அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதியான 10,000 மெற்றிக் தொன் அரசி  இந்தியாவின் தூத்துக்குடியிலிருந்து தனியார் துறையினரால் இறக்குமதியான 10,000 மெற்றிக் தொன் அரசி நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.இந்நிலையில், அரசாங்கம் முதற்கட்டமாக கொள்வனவு செய்யவுள்ள 5,200 மெற்றிக் தொன் அரிசி, எதிர்வரும்  திங்கட்கிழமை நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து, இரண்டாம் கட்டமாக மேலும் 20,800 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு அரிசி இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முதலில் நாட்டரிசியே இவ்வாறு இறக்குமதி செய்யப்படவுள்ளது.அதன் பின்னர் தேவைப்படும் போது ஏனைய அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now