• Sep 21 2024

உலக சாதனை படைத்த கிராமிய நடனம்- நடனத்தில் சாதனை புரிந்த10,000 பெண்கள்!

Tamil nila / Aug 14th 2024, 8:00 pm
image

Advertisement

இந்தியா, காஷ்மீர், பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த 10,000 பெண்கள் இணைந்து காஷ்மீர் கிராமிய நடனமாடி உலக சாதனை படைத்துள்ளனர்.

நாளை வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாரமுல்லா மாவட்டத்தில் கஷுர்ரிவாஜ் கலைத் திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமையன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

குறித்த இந் நிகழ்வில் காஷ்மீரின் பாரம்பரிய இசை, நடனக்கலை, எழுத்துக்கலை ஆகியவற்றைக் கலைஞர்கள் அரங்கேற்றினர்.

மேலும் 10 ஆயிரம் பெண்கள் ஒன்று சேர்ந்து ஆடிய ரவுஃப் கிராமிய நடனம் அனைவரையும் கவர்ந்ததோடு, உலகளாவிய சாதனை கூட்டமைப்பு இந் நடனத்தை அங்கீகரித்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் என்றும் அறிவித்தது.

குறிப்பாக இந்நிகழ்வை பாரமுல்லா மாவட்ட நிர்வாகத்துக்குட்பட்ட குத்துவாள் இராணுவப் பிரிவினரும் இந்திரானிபாலன் அறக்கட்டளையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலக சாதனை படைத்த கிராமிய நடனம்- நடனத்தில் சாதனை புரிந்த10,000 பெண்கள் இந்தியா, காஷ்மீர், பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த 10,000 பெண்கள் இணைந்து காஷ்மீர் கிராமிய நடனமாடி உலக சாதனை படைத்துள்ளனர்.நாளை வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாரமுல்லா மாவட்டத்தில் கஷுர்ரிவாஜ் கலைத் திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமையன்று ஏற்பாடு செய்யப்பட்டது.குறித்த இந் நிகழ்வில் காஷ்மீரின் பாரம்பரிய இசை, நடனக்கலை, எழுத்துக்கலை ஆகியவற்றைக் கலைஞர்கள் அரங்கேற்றினர்.மேலும் 10 ஆயிரம் பெண்கள் ஒன்று சேர்ந்து ஆடிய ரவுஃப் கிராமிய நடனம் அனைவரையும் கவர்ந்ததோடு, உலகளாவிய சாதனை கூட்டமைப்பு இந் நடனத்தை அங்கீகரித்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் என்றும் அறிவித்தது.குறிப்பாக இந்நிகழ்வை பாரமுல்லா மாவட்ட நிர்வாகத்துக்குட்பட்ட குத்துவாள் இராணுவப் பிரிவினரும் இந்திரானிபாலன் அறக்கட்டளையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement