• Sep 21 2024

ஐரோப்பியாவுக்கு கடல் வழியாக செல்ல முயன்ற 1,088 புலம்பெயர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தம்!

Tamil nila / Jan 5th 2023, 9:10 pm
image

Advertisement

லிபியாவிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பியாவுக்கு செல்ல முயன்ற 1,088 புலம்பெயர்ந்தவர்கள் லிபிய கடற்பரப்பில் தடுக்கப்பட்டு மீண்டும் லிபியாவுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர். 



“கடந்த 25 முதல் 31 டிசம்பர் 2022 வரையிலான காலத்தில், 1,088 புலம்பெயர்ந்தவர்கள் இடைமறிக்கப்பட்டு லிபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்,” என ஐஓ எம் எனப்படும் புலம்பெயர்வுக்கான பன்னாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. 



புலம்பெயர்வுக்கான பன்னாட்டு அமைப்பின் கணக்குப்படி, கடந்த 2022ம் ஆண்டில் 24,684 புலம்பெயர்ந்தவர்கள் இடைமறிக்கப்பட்டு லிபியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன் 525 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 848 பேர் காணாமல் போகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுவே ,கடந்த 2021ம் ஆண்டில் 32,425 பேர் இடைமறிக்கப்பட்டு லிபியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



போர் மற்றும் வறுமை காரணமாக ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடையும் நோக்கத்துடன் வெளியேறும் மக்களுக்கான முக்கிய புள்ளியாக ‘லிபியா’ இருந்து வருகிறது.  

ஐரோப்பியாவுக்கு கடல் வழியாக செல்ல முயன்ற 1,088 புலம்பெயர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தம் லிபியாவிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பியாவுக்கு செல்ல முயன்ற 1,088 புலம்பெயர்ந்தவர்கள் லிபிய கடற்பரப்பில் தடுக்கப்பட்டு மீண்டும் லிபியாவுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர். “கடந்த 25 முதல் 31 டிசம்பர் 2022 வரையிலான காலத்தில், 1,088 புலம்பெயர்ந்தவர்கள் இடைமறிக்கப்பட்டு லிபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்,” என ஐஓ எம் எனப்படும் புலம்பெயர்வுக்கான பன்னாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. புலம்பெயர்வுக்கான பன்னாட்டு அமைப்பின் கணக்குப்படி, கடந்த 2022ம் ஆண்டில் 24,684 புலம்பெயர்ந்தவர்கள் இடைமறிக்கப்பட்டு லிபியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன் 525 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 848 பேர் காணாமல் போகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே ,கடந்த 2021ம் ஆண்டில் 32,425 பேர் இடைமறிக்கப்பட்டு லிபியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. போர் மற்றும் வறுமை காரணமாக ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடையும் நோக்கத்துடன் வெளியேறும் மக்களுக்கான முக்கிய புள்ளியாக ‘லிபியா’ இருந்து வருகிறது.  

Advertisement

Advertisement

Advertisement