• May 20 2024

ஆடையில்லாமல் இழுத்துச் செல்லப்பட்டு இறந்த பெண்.. மேலும் இருவர் கைது!

Tamil nila / Jan 5th 2023, 9:01 pm
image

Advertisement

இந்திய தலைநகர் டெல்லியில் காரில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்த விவகாரத்தில் 7 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


டெல்லியின் கஞ்சவாலா பகுதியில் கார் ஒன்று மோதி, வெகுதூரம் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


அப்பெண்ணின் உடல் ஆடையில்லாத நிலையில் மீட்கப்பட்டது. இந்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.


இந்த நிலையில் மேலும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், 'விசாரணையில் காரை தீபக் ஓட்டவில்லை, அமித் ஓட்டினார் என்பதும் தெரிய வந்தது.


மேலும், அசுதோஷ் மற்றும் அங்குஷ் கண்ணா ஆகியோரும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இருவரையும் கைது செய்ய முயற்சித்து வருகிறோம். பிரேத பரிசோதனையின் முடிவில் உயிரிழந்த அஞ்சலி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிய வந்துள்ளது' என தெரிவித்துள்ளனர்.


இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் வேறுபடுகிறது என்றும், 10 குழுக்கள் பணியாற்றி வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.     

ஆடையில்லாமல் இழுத்துச் செல்லப்பட்டு இறந்த பெண். மேலும் இருவர் கைது இந்திய தலைநகர் டெல்லியில் காரில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்த விவகாரத்தில் 7 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.டெல்லியின் கஞ்சவாலா பகுதியில் கார் ஒன்று மோதி, வெகுதூரம் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அப்பெண்ணின் உடல் ஆடையில்லாத நிலையில் மீட்கப்பட்டது. இந்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில் மேலும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், 'விசாரணையில் காரை தீபக் ஓட்டவில்லை, அமித் ஓட்டினார் என்பதும் தெரிய வந்தது.மேலும், அசுதோஷ் மற்றும் அங்குஷ் கண்ணா ஆகியோரும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இருவரையும் கைது செய்ய முயற்சித்து வருகிறோம். பிரேத பரிசோதனையின் முடிவில் உயிரிழந்த அஞ்சலி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிய வந்துள்ளது' என தெரிவித்துள்ளனர்.இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் வேறுபடுகிறது என்றும், 10 குழுக்கள் பணியாற்றி வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.     

Advertisement

Advertisement

Advertisement