• May 29 2026

பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த 11 வயது சிறுவன் பலி - கேகாலையில் துயரம்

Chithra / Jan 29th 2026, 9:04 pm
image

கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனகல பகுதியில் வீட்டிற்கு அருகிலிருந்த பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்ததில்  சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.


07 ஆம் வகுப்பு கல்வி பயிலும் 11 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 


குறித்த சிறுவனுக்கு மனநலக் குறைபாடு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


சிறுவனின் பிரேத பரிசோதனை இன்று அவிஸ்ஸாவெல்ல மாவட்ட வைத்தியசாலையில் நடைபெற்றதாக தெரியவருகின்றது.  


சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல – மெதகொட பொலிஸ் முறைப்பாட்டு நிலையம் மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது. 


பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த 11 வயது சிறுவன் பலி - கேகாலையில் துயரம் கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனகல பகுதியில் வீட்டிற்கு அருகிலிருந்த பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்ததில்  சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.07 ஆம் வகுப்பு கல்வி பயிலும் 11 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவனுக்கு மனநலக் குறைபாடு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.சிறுவனின் பிரேத பரிசோதனை இன்று அவிஸ்ஸாவெல்ல மாவட்ட வைத்தியசாலையில் நடைபெற்றதாக தெரியவருகின்றது.  சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல – மெதகொட பொலிஸ் முறைப்பாட்டு நிலையம் மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement