• Dec 05 2024

ரூபிக்ஸ் கியூப்களை பயன்படுத்தி ஜனாதிபதி அநுரவின் உருவப்படம் - உலக சாதனை படைத்த 11 வயது சிறுவன்

Chithra / Dec 4th 2024, 3:21 pm
image


1,200 ரூபிக்ஸ் கியூப்களை பயன்படுத்தி 91 அங்குல உயரமும் 68 அங்குல அகலமும் கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பாரிய உருவப்படத்தை உருவாக்கி 11 வயது சிறுவன் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

சன்சுல் செஹன்ஷா லக்மால் (Sansul Sehansha Lakmal) என்ற சிறுவனே இந்த சாதனையை படைத்துள்ளார்.  

அவர் இந்த சாதனையை 3 மணி நேரம், 13 நிமிடங்கள், 7 வினாடிகளில் செய்து சோழன் உலக சாதனைகளில் இடம்பெற்றார்.

சோழன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (Cholan Book of World Records) மற்றும் பீப்பிள்ஸ் ஹெல்பிங் பீப்பிள் ஃபவுண்டேஷன் (Peoples Helping People Foundation ) ஆகியவை இணைந்து நேற்று இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.

கம்பஹா, யக்கலவில் உள்ள ரணவிரு ஆடை நீச்சல் தடாகத்தில், முகாமின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் மஹா துவாக்கர் மற்றும் பிரதி கட்டளை அதிகாரி பிரிகேடியர் வாசகே ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

சன்சுலின் சாதனையை அங்கீகரிப்பதற்காக, அமைப்பாளர்கள், இராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து, சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம் ஆகியவற்றை வழங்கி கெளரவித்தனர்



ரூபிக்ஸ் கியூப்களை பயன்படுத்தி ஜனாதிபதி அநுரவின் உருவப்படம் - உலக சாதனை படைத்த 11 வயது சிறுவன் 1,200 ரூபிக்ஸ் கியூப்களை பயன்படுத்தி 91 அங்குல உயரமும் 68 அங்குல அகலமும் கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பாரிய உருவப்படத்தை உருவாக்கி 11 வயது சிறுவன் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.சன்சுல் செஹன்ஷா லக்மால் (Sansul Sehansha Lakmal) என்ற சிறுவனே இந்த சாதனையை படைத்துள்ளார்.  அவர் இந்த சாதனையை 3 மணி நேரம், 13 நிமிடங்கள், 7 வினாடிகளில் செய்து சோழன் உலக சாதனைகளில் இடம்பெற்றார்.சோழன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (Cholan Book of World Records) மற்றும் பீப்பிள்ஸ் ஹெல்பிங் பீப்பிள் ஃபவுண்டேஷன் (Peoples Helping People Foundation ) ஆகியவை இணைந்து நேற்று இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.கம்பஹா, யக்கலவில் உள்ள ரணவிரு ஆடை நீச்சல் தடாகத்தில், முகாமின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் மஹா துவாக்கர் மற்றும் பிரதி கட்டளை அதிகாரி பிரிகேடியர் வாசகே ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.சன்சுலின் சாதனையை அங்கீகரிப்பதற்காக, அமைப்பாளர்கள், இராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து, சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம் ஆகியவற்றை வழங்கி கெளரவித்தனர்

Advertisement

Advertisement

Advertisement