• Dec 05 2024

பலாலியில் 34 ஆண்டுகளின் பின் திறக்கப்பட்ட ஆலயத்தில் இன்று வழிபாடு - வடக்கு ஆளுநரும் பங்கேற்பு

Chithra / Dec 4th 2024, 3:10 pm
image


யாழ்ப்பாணம் - பலாலியில் மக்கள் வழிபாட்டுக்கு அண்மையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று புதன்கிழமை வழிபாடுகள் இடம்பெற்றது

வழிபாடுகளில் வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க ஆகியோரும் பங்கேற்றனர். 

இதன்போது ஆலய நிர்வாகத்தினராலும், ஆலயக் குருக்களாலும் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டனர். 

இந்த நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலக மேலதிக மாவட்டச் செயலர் க.சிறிமோகனன், கிராம அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க இன்றுடன் இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதியாக பதவி உயர்வு பெற்றுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

பலாலி வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு 34 வருடங்களின் பின்னர் மக்கள் வழிபாட்டுக்கு  செல்ல   அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 


பலாலியில் 34 ஆண்டுகளின் பின் திறக்கப்பட்ட ஆலயத்தில் இன்று வழிபாடு - வடக்கு ஆளுநரும் பங்கேற்பு யாழ்ப்பாணம் - பலாலியில் மக்கள் வழிபாட்டுக்கு அண்மையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று புதன்கிழமை வழிபாடுகள் இடம்பெற்றதுவழிபாடுகளில் வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க ஆகியோரும் பங்கேற்றனர். இதன்போது ஆலய நிர்வாகத்தினராலும், ஆலயக் குருக்களாலும் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலக மேலதிக மாவட்டச் செயலர் க.சிறிமோகனன், கிராம அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க இன்றுடன் இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதியாக பதவி உயர்வு பெற்றுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. பலாலி வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு 34 வருடங்களின் பின்னர் மக்கள் வழிபாட்டுக்கு  செல்ல   அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement