முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலைய பிரிவில் பொரும்பான்மையினத்தவர்களின் ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும், தமிழர்களின் பூர்வீக விவசாய நிலங்களான அக்கரைவெளி, எரிஞ்சகாடு, நாயடிச்சமுறிப்பு, பாலங்காடு உள்ளிட்ட வயல் நிலங்களுக்குச்செல்லும் வீதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளமையால் குறித்த வயல் நிலங்களில் நெற்பயிற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள குறித்த வீதியை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரடியாகச்சென்று பார்வையிட்டதுடன், முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளருடன் தொடர்புகொண்டு குறித்த வீதியை மிக விரைவாக சீரமைப்புச்செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த வீதியை பார்வையிட்டபின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
சுமார் 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்களில் நெற்பயிற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் இந்த வீதியைப் பயன்படுத்துகின்றனர்.
அந்தவகையில் இந்த வீதியால் விவசாய உள்ளீடுகளை கொண்டு செல்வதிலும், நெல் அறுவடைகளை எடுத்துச் செல்வதிலும் விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
அதேவேளை குறித்த விவசாய நிலங்கள் தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்கள் என்பதுடன், பெரும்பான்மையினத்தவர்களின் ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் விவசாய நிலங்களாகும்.
எனவே குறித்த விவசாய நிலங்களுக்குச் செல்லும் இந்த வீதியை சீரமைப்பு செய்வது மிகவும் அவசியமானது. இதுதொடர்பிலே கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளருடன் பேசி, விரைவாக குறித்த வீதியை மறுசீரமைப்புச் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளேன்.
அவரும் குறித்த வீதியை சீரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார் - என்றார்.
ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் விவசாய நிலங்களுக்கு செல்லும் வீதி; ஆராய்ந்தார் ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலைய பிரிவில் பொரும்பான்மையினத்தவர்களின் ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும், தமிழர்களின் பூர்வீக விவசாய நிலங்களான அக்கரைவெளி, எரிஞ்சகாடு, நாயடிச்சமுறிப்பு, பாலங்காடு உள்ளிட்ட வயல் நிலங்களுக்குச்செல்லும் வீதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளமையால் குறித்த வயல் நிலங்களில் நெற்பயிற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந் நிலையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள குறித்த வீதியை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரடியாகச்சென்று பார்வையிட்டதுடன், முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளருடன் தொடர்புகொண்டு குறித்த வீதியை மிக விரைவாக சீரமைப்புச்செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார். குறித்த வீதியை பார்வையிட்டபின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், சுமார் 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்களில் நெற்பயிற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் இந்த வீதியைப் பயன்படுத்துகின்றனர். அந்தவகையில் இந்த வீதியால் விவசாய உள்ளீடுகளை கொண்டு செல்வதிலும், நெல் அறுவடைகளை எடுத்துச் செல்வதிலும் விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அதேவேளை குறித்த விவசாய நிலங்கள் தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்கள் என்பதுடன், பெரும்பான்மையினத்தவர்களின் ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் விவசாய நிலங்களாகும். எனவே குறித்த விவசாய நிலங்களுக்குச் செல்லும் இந்த வீதியை சீரமைப்பு செய்வது மிகவும் அவசியமானது. இதுதொடர்பிலே கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளருடன் பேசி, விரைவாக குறித்த வீதியை மறுசீரமைப்புச் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளேன். அவரும் குறித்த வீதியை சீரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார் - என்றார்.