• Apr 03 2025

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேலும் 118 முறைப்பாடுகள்!

Tamil nila / Aug 29th 2024, 6:46 pm
image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேலும் 118 முறைப்பாடுகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று (28) வரை பெறப்பட்ட தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,347 ஆக உயர்ந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளில் 1,285 முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 6 முறைப்பாடுகளும், இதர சம்பவங்கள் தொடர்பில் 56 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேலும் 118 முறைப்பாடுகள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேலும் 118 முறைப்பாடுகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று (28) வரை பெறப்பட்ட தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,347 ஆக உயர்ந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளில் 1,285 முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கு மேலதிகமாக வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 6 முறைப்பாடுகளும், இதர சம்பவங்கள் தொடர்பில் 56 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement