ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 126ஆக அதிகரித்ததுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
அந்த நாட்டின் இஷிகாவா தீவுக்கு அருகே ஜப்பான் கடல் பகுதியில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் பதிவானது.
அதன் பின், தொடா்ச்சியாக 20க்கும் மேற்பட்ட சிறிய நிலநடுக்கங்கள் எற்பட்டன. இந்த நிலையில், நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 126ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இதேவேளை இந்நிலநடுக்கத்தினால் இதுவரை 611 போ் காயமடைந்துள்ளதாகவும், சுமாா் 210 போ் மாயமாகியுள்ளதாகவும் அவா்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானில் இதுவரை ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் 126 பேர் பலி.samugammedia ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 126ஆக அதிகரித்ததுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அந்த நாட்டின் இஷிகாவா தீவுக்கு அருகே ஜப்பான் கடல் பகுதியில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் பதிவானது. அதன் பின், தொடா்ச்சியாக 20க்கும் மேற்பட்ட சிறிய நிலநடுக்கங்கள் எற்பட்டன. இந்த நிலையில், நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 126ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். இதேவேளை இந்நிலநடுக்கத்தினால் இதுவரை 611 போ் காயமடைந்துள்ளதாகவும், சுமாா் 210 போ் மாயமாகியுள்ளதாகவும் அவா்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.