• Nov 22 2024

மாலைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி - இலங்கை மீனவர்கள் 13 பேர் கைது..!

Chithra / Jan 28th 2024, 12:08 pm
image

 

மாலைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்கள் பயணித்த 02 மீன்பிடி படகுகளையும் அந்நாட்டு கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

ஒரு கப்பலில் 7 மீனவர்களும், மற்றொரு கப்பலில் 6 மீனவர்களும் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த இரண்டு மீன்பிடி படகுகளும் கடந்த 25ஆம் திகதி பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு படகுகளும் தற்போது ஹா அலிஃப் ஃபில்லதூ துறைமுகத்தில் நங்கூரமிட்டு, நூராதீன் என்ற கடலோர  பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மாலைத்தீவு கடற்பரப்பில் இந்திய மற்றும் இலங்கை மீன்பிடி கப்பல்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது வழமையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மாலைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி - இலங்கை மீனவர்கள் 13 பேர் கைது.  மாலைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்கள் பயணித்த 02 மீன்பிடி படகுகளையும் அந்நாட்டு கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர்.ஒரு கப்பலில் 7 மீனவர்களும், மற்றொரு கப்பலில் 6 மீனவர்களும் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.இந்த இரண்டு மீன்பிடி படகுகளும் கடந்த 25ஆம் திகதி பொறுப்பேற்கப்பட்டுள்ளன.இந்த இரண்டு படகுகளும் தற்போது ஹா அலிஃப் ஃபில்லதூ துறைமுகத்தில் நங்கூரமிட்டு, நூராதீன் என்ற கடலோர  பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.மாலைத்தீவு கடற்பரப்பில் இந்திய மற்றும் இலங்கை மீன்பிடி கப்பல்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது வழமையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement