• Mar 10 2026

லண்டனில் 13 வயது சிறுவன் கைது!

Ziya / Feb 11th 2026, 2:13 pm
image

வடமேற்கு லண்டனில் உள்ள ஒரு பாடசாலையில், சக மாணவர்கள் இருவரை கத்தியால் குத்திய சம்வத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.


நேற்று மதியம் 12:40 மணியளவில், பிரெண்ட் பகுதியில் உள்ள கிங்ஸ்பரி உயர்நிலைப் பாடசாலைக்கு அவசர அழைப்பின் பேரில் பொலிஸார் சென்றனர்.


அங்கு 13 வயது சிறுவன் ஒருவன் கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்டான்.


பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அதே இடத்தில் 12 வயது சிறுவன் ஒருவனும் கத்தியால் குத்தப்பட்டது தெரியவந்தது.


படுகாயமடைந்த இரு மாணவர்களும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


தாக்குதலை நடத்திய 13 வயது சிறுவன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றான். இருப்பினும், அடுத்த சில மணிநேரங்களில் பொலிஸார்  அவனை மடக்கிப் பிடித்தனர்.


தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் மீட்கப்பட்டுள்ளது.  


இந்தத் தாக்குதலுக்கான பின்னணி குறித்து நாங்கள் தீவிரமாக விசாரித்து வருகிறோம்.தற்போது வரை இது ஒரு பயங்கரவாதச் செயலாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர்." என  புலனாய்வுப் பிரதானி லூக் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.


சுமார் 2,000 மாணவர்கள் பயிலும் இந்தப் பாடசாலையில் நடந்த இந்தச் சம்பவம், பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்தத் துயரமான சம்பவத்தைத் தொடர்ந்து, பாடசாலைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், மாணவர்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகளை வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

லண்டனில் 13 வயது சிறுவன் கைது வடமேற்கு லண்டனில் உள்ள ஒரு பாடசாலையில், சக மாணவர்கள் இருவரை கத்தியால் குத்திய சம்வத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று மதியம் 12:40 மணியளவில், பிரெண்ட் பகுதியில் உள்ள கிங்ஸ்பரி உயர்நிலைப் பாடசாலைக்கு அவசர அழைப்பின் பேரில் பொலிஸார் சென்றனர்.அங்கு 13 வயது சிறுவன் ஒருவன் கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்டான்.பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அதே இடத்தில் 12 வயது சிறுவன் ஒருவனும் கத்தியால் குத்தப்பட்டது தெரியவந்தது.படுகாயமடைந்த இரு மாணவர்களும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதலை நடத்திய 13 வயது சிறுவன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றான். இருப்பினும், அடுத்த சில மணிநேரங்களில் பொலிஸார்  அவனை மடக்கிப் பிடித்தனர்.தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் மீட்கப்பட்டுள்ளது.  இந்தத் தாக்குதலுக்கான பின்னணி குறித்து நாங்கள் தீவிரமாக விசாரித்து வருகிறோம்.தற்போது வரை இது ஒரு பயங்கரவாதச் செயலாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர்." என  புலனாய்வுப் பிரதானி லூக் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.சுமார் 2,000 மாணவர்கள் பயிலும் இந்தப் பாடசாலையில் நடந்த இந்தச் சம்பவம், பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தத் துயரமான சம்பவத்தைத் தொடர்ந்து, பாடசாலைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், மாணவர்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகளை வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement