• Oct 30 2024

வளர்ப்பு தந்தையால் கர்ப்பம் தரித்த 13 வயது சிறுமிக்கு சட்டவிரோத கருக்கலைப்பு..! தமிழர் பகுதியில் நடந்த கொடூர சம்பவம்..! samugammedia

Chithra / Nov 14th 2023, 5:05 pm
image

Advertisement


முல்லைத்தீவு - குமுழமுனைப்பகுதியில் தாயின் இரண்டாவது கணவனால் கர்ப்பம் தரித்த 13 வயது சிறுமிக்கு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு முன்னால் உள்ள மருந்தகம் ஒன்றில் சட்டவிரோத கருக்கலைப்பு இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் கடந்த ஆண்டு இறுதிப்பகுதியில் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (13) முல்லைத்தீவு பொலிஸில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்களால் தொடரப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து ​பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

இந் நிலையில் சிறுமியின் கருத்தரிப்பிற்கு காரணமாக இருந்த வளர்ப்பு தந்தை, உடந்தையாக இருந்த தாயார் மற்றும் கருக்கலைப்பினை மேற்கொண்ட தனியார் மருந்தகம் உரிமையாளர் உள்ளிட்டவர்கள் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வளர்ப்பு தந்தையால் கர்ப்பம் தரித்த 13 வயது சிறுமிக்கு சட்டவிரோத கருக்கலைப்பு. தமிழர் பகுதியில் நடந்த கொடூர சம்பவம். samugammedia முல்லைத்தீவு - குமுழமுனைப்பகுதியில் தாயின் இரண்டாவது கணவனால் கர்ப்பம் தரித்த 13 வயது சிறுமிக்கு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு முன்னால் உள்ள மருந்தகம் ஒன்றில் சட்டவிரோத கருக்கலைப்பு இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் கடந்த ஆண்டு இறுதிப்பகுதியில் இடம்பெற்றது.சம்பவம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (13) முல்லைத்தீவு பொலிஸில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்களால் தொடரப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து ​பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.இந் நிலையில் சிறுமியின் கருத்தரிப்பிற்கு காரணமாக இருந்த வளர்ப்பு தந்தை, உடந்தையாக இருந்த தாயார் மற்றும் கருக்கலைப்பினை மேற்கொண்ட தனியார் மருந்தகம் உரிமையாளர் உள்ளிட்டவர்கள் பொலிஸார் கைது செய்துள்ளனர்.மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement