• May 17 2024

கடற்றொழில் சட்டங்கள் தொடர்பில் எமக்கு தெளிவுபடுத்தப்படவில்லை...! ஜோசப் பிரான்சிஸ் குற்றச்சாட்டு...!samugammedia

Sharmi / Nov 14th 2023, 5:06 pm
image

Advertisement

கடற்றொழில் தொடர்பில் புதிய புதிய சட்டங்கள் உருவாக்கப்படுவதாகவும் இச் சட்டம் உருவாக்கப்பட்டு இருந்த போதிலும் சட்டம் தொடர்பாக எமக்கு போதிய தெளிவுபடுத்தபடாமையால் தாம் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கடற்றொழில் அமைப்பின் அமைப்பாளர் ஜோசப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்பொழுது மீனவரின் வாழ்வாதாரம் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை வாரத்தில் மூன்று நாட்களே கடற்றொழில் மேற்கொள்ள முடிக்கின்றது.

ஏனைய நாட்களில் வலைகளை விரித்துவிட்டு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன்  தற்பொழுது மீன்களின் நிலை சடுதியாக விலை குறைந்து காணப்படுவதன் காரணமாக போதிய வாழ்வாதாரத்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் மீனவர் குடும்பங்கள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன் தற்பொழுது பல பகுதிகளில் அனர்தங்கள் தொடர்பாக முன்னெச்சரிக்கை விடுக்கப்படுவதன் காரணமாகவும் கடற்றொழில் பாதிக்கப்படுவதாகவும் அத்துடன் கடல் தொழில் சம்பந்தமாக புதிய புதிய சட்டங்கள் உருவாக்கப்படுவதாகவும் இச் சட்டம் உருவாக்கப்பட்டு இருந்த போதிலும் சட்டம் தொடர்பாக எமக்கு போதிய தெளிவுபடுத்த படாமை காரணத்தினாலும் பல்வேறு இன்னல்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் தற்பொழுது கூட அரசாங்கம் வரவு செலவு திட்டத்தின் ஊடாக மீனவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது எவ்வகையில் எப்படி கிடைக்க பெற போகின்றது என்பதும் தொடர்பாகவும் இதுவரையில் தமக்கு தெரியவில்லை  அப்படி வழங்கப்படுகின்ற பணம் நமக்கு சரியான முறையில் கிடைக்கப்பெறுமா என்பது கூட பெரும் ஐயப்பாடாகவே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.









கடற்றொழில் சட்டங்கள் தொடர்பில் எமக்கு தெளிவுபடுத்தப்படவில்லை. ஜோசப் பிரான்சிஸ் குற்றச்சாட்டு.samugammedia கடற்றொழில் தொடர்பில் புதிய புதிய சட்டங்கள் உருவாக்கப்படுவதாகவும் இச் சட்டம் உருவாக்கப்பட்டு இருந்த போதிலும் சட்டம் தொடர்பாக எமக்கு போதிய தெளிவுபடுத்தபடாமையால் தாம் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கடற்றொழில் அமைப்பின் அமைப்பாளர் ஜோசப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,தற்பொழுது மீனவரின் வாழ்வாதாரம் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை வாரத்தில் மூன்று நாட்களே கடற்றொழில் மேற்கொள்ள முடிக்கின்றது.ஏனைய நாட்களில் வலைகளை விரித்துவிட்டு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன்  தற்பொழுது மீன்களின் நிலை சடுதியாக விலை குறைந்து காணப்படுவதன் காரணமாக போதிய வாழ்வாதாரத்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் மீனவர் குடும்பங்கள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அத்துடன் தற்பொழுது பல பகுதிகளில் அனர்தங்கள் தொடர்பாக முன்னெச்சரிக்கை விடுக்கப்படுவதன் காரணமாகவும் கடற்றொழில் பாதிக்கப்படுவதாகவும் அத்துடன் கடல் தொழில் சம்பந்தமாக புதிய புதிய சட்டங்கள் உருவாக்கப்படுவதாகவும் இச் சட்டம் உருவாக்கப்பட்டு இருந்த போதிலும் சட்டம் தொடர்பாக எமக்கு போதிய தெளிவுபடுத்த படாமை காரணத்தினாலும் பல்வேறு இன்னல்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.அத்துடன் தற்பொழுது கூட அரசாங்கம் வரவு செலவு திட்டத்தின் ஊடாக மீனவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது எவ்வகையில் எப்படி கிடைக்க பெற போகின்றது என்பதும் தொடர்பாகவும் இதுவரையில் தமக்கு தெரியவில்லை  அப்படி வழங்கப்படுகின்ற பணம் நமக்கு சரியான முறையில் கிடைக்கப்பெறுமா என்பது கூட பெரும் ஐயப்பாடாகவே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement