• May 03 2024

வரவு செலவு திட்டம் வெறும் கண்துடைப்பு...! வேலுக்குமார் எம்.பி சபையில் சுட்டிக்காட்டு..!samugammedia

Sharmi / Nov 14th 2023, 5:15 pm
image

Advertisement

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்டுள்ள நிலையில் தோட்டங்களில் வாழ்கின்ற  மக்களினது வாழ்வாதார நிலங்கள் தொடர்பாக பேசப்படாதது ஏன் என  நாடாளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.

வரவு செலவு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்றையதினம் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

குறிப்பாக இன்று நாட்டிலே வரவு செலவு திட்டம் வருகின்றபோது , தேர்தல் கால வாக்குறுதிகள் போன்று வரவு செலவு திட்டத்திலும் மலையகத்திற்கு என ஒரு பந்தி ஒதுக்கப்படும்.

அந்த பந்தியிலே எதேனும் ஒரு பகுதி முன்வைக்கப்படும் எனவும் ஆனால் அந்த விடயம் ஒது போதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் 2012 மற்றும் 2013 ஆண்டு காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்சவினுடைய அரசாங்கத்தின்போது மலையகத்தில் உள்ள தரிசு நிலங்களை மலையத்தில் உள்ள இளைஞர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதாக கூறிய நிலையில் இதுவரை பகிர்ந்து கொடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

அதேபோல தற்போது இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்கவின் காலத்திலும் 2017 ஆம் ஆண்டு 75 ஆயிரம் தனி அலகுகளை மலையத்தில் வீடமைப்புக்காக உருவாக்குவோம் என்ற முன்மொழிவு வைக்கப்பட்டதுடன் தற்போது வரை அந்த முன்மொழிவு நிறைவேற்றப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

வரவு செலவு திட்டம் வெறும் கண்துடைப்பு. வேலுக்குமார் எம்.பி சபையில் சுட்டிக்காட்டு.samugammedia 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்டுள்ள நிலையில் தோட்டங்களில் வாழ்கின்ற  மக்களினது வாழ்வாதார நிலங்கள் தொடர்பாக பேசப்படாதது ஏன் என  நாடாளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.வரவு செலவு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்றையதினம் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,குறிப்பாக இன்று நாட்டிலே வரவு செலவு திட்டம் வருகின்றபோது , தேர்தல் கால வாக்குறுதிகள் போன்று வரவு செலவு திட்டத்திலும் மலையகத்திற்கு என ஒரு பந்தி ஒதுக்கப்படும்.அந்த பந்தியிலே எதேனும் ஒரு பகுதி முன்வைக்கப்படும் எனவும் ஆனால் அந்த விடயம் ஒது போதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.அத்துடன் 2012 மற்றும் 2013 ஆண்டு காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்சவினுடைய அரசாங்கத்தின்போது மலையகத்தில் உள்ள தரிசு நிலங்களை மலையத்தில் உள்ள இளைஞர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதாக கூறிய நிலையில் இதுவரை பகிர்ந்து கொடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.அதேபோல தற்போது இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்கவின் காலத்திலும் 2017 ஆம் ஆண்டு 75 ஆயிரம் தனி அலகுகளை மலையத்தில் வீடமைப்புக்காக உருவாக்குவோம் என்ற முன்மொழிவு வைக்கப்பட்டதுடன் தற்போது வரை அந்த முன்மொழிவு நிறைவேற்றப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement