• May 17 2024

வவுனியாவில் பொலிஸாரின் மோட்டார் சைக்கிளை மோதிய பாரவூர்தி - ஒருவர் கைது

Tharun / May 2nd 2024, 9:50 pm
image

Advertisement

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்ற பாரவூர்தி - மோட்டார் சைக்கில் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்

பாரவூர்தியுடன் பொலிஸார் உத்தியோகத்தர் செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளினை செலுத்திச்சென்ற நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன் பாரவூர்தியின் சாரதியினையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் இரு வாகனங்களையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் பொலிஸாரின் மோட்டார் சைக்கிளை மோதிய பாரவூர்தி - ஒருவர் கைது வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்ற பாரவூர்தி - மோட்டார் சைக்கில் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்பாரவூர்தியுடன் பொலிஸார் உத்தியோகத்தர் செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளினை செலுத்திச்சென்ற நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன் பாரவூர்தியின் சாரதியினையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.மேலும் இரு வாகனங்களையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement