கண்டி, பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பலகொல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி, மஹய்யாவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் அபாயகரமாக பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கண்டி பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பலகொல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சிறையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த இளைஞன் - கண்டியில் சம்பவம் கண்டி, பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பலகொல்ல பொலிஸார் தெரிவித்தனர்.கண்டி, மஹய்யாவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவர் அபாயகரமாக பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கண்டி பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பலகொல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.