• Oct 30 2024

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக கொழும்பிலிருந்து ஊருக்கு திரும்பிய இளைஞர்கள் கைது..!

Sharmi / Oct 30th 2024, 10:55 am
image

Advertisement

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள்களை எடுத்து வந்த நான்கு இளைஞர்கள் ஹட்டன் பொலிஸாரால் இன்று(30)  கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன், டிக்கோயா, சாஞ்சிமலை பகுதியைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் தொழில்புரிந்த இவர்கள், தீபாவளி பண்டிகைக்காக தமது ஊர் பகுதிக்கு வந்துள்ளனர். 

இந்நிலையில், அவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட பொலிஸார் அவர்களை சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

இதன்போது ஐஸ், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் என்பன அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த இளைஞர்கள் நால்வரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதானவர்கள் 22 மற்றும் 28 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக கொழும்பிலிருந்து ஊருக்கு திரும்பிய இளைஞர்கள் கைது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள்களை எடுத்து வந்த நான்கு இளைஞர்கள் ஹட்டன் பொலிஸாரால் இன்று(30)  கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹட்டன், டிக்கோயா, சாஞ்சிமலை பகுதியைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பில் தொழில்புரிந்த இவர்கள், தீபாவளி பண்டிகைக்காக தமது ஊர் பகுதிக்கு வந்துள்ளனர். இந்நிலையில், அவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட பொலிஸார் அவர்களை சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.இதன்போது ஐஸ், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் என்பன அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் குறித்த இளைஞர்கள் நால்வரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைதானவர்கள் 22 மற்றும் 28 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் குறித்த சந்தேக நபர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement