• Jan 23 2025

13 வயது மாணவிக்கு 52 வயது ஆசிரியரால் நடந்த கொடூரம் - யாழில் சம்பவம்

Chithra / Jan 23rd 2025, 11:51 am
image

 

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியரை கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 17 ஆம் திகதி, 13 வயதுடைய குறித்த மாணவியை அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 52 வயதுடைய ஆசிரியர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நேற்றையதினம் (22) கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் சம்பவம் குறித்து நடவடிக்கைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிசார், சந்தேக நபரான ஆசிரியரை இன்றையதினம் கைது செய்தனர்.

மாணவி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், 

அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

13 வயது மாணவிக்கு 52 வயது ஆசிரியரால் நடந்த கொடூரம் - யாழில் சம்பவம்  யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியரை கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர்.இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,கடந்த 17 ஆம் திகதி, 13 வயதுடைய குறித்த மாணவியை அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 52 வயதுடைய ஆசிரியர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நேற்றையதினம் (22) கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் சம்பவம் குறித்து நடவடிக்கைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிசார், சந்தேக நபரான ஆசிரியரை இன்றையதினம் கைது செய்தனர்.மாணவி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட ஆசிரியரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement