• Nov 25 2024

நிலவும் சீரற்ற காலநிலை - 13 மாவட்டங்களைச் சேர்ந்த 137,792 பேர் பாதிப்பு!

Tamil nila / Oct 16th 2024, 8:35 pm
image

குடா கங்கை, கிங் கங்கை மற்றும் நில்வள கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 அதேநேரம், ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது. 

 கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 இதனிடையே, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 13 மாவட்டங்களைச் சேர்ந்த 137,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 அத்துடன், 344 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

 பாதிக்கப்பட்ட 2,222 குடும்பங்களைச் சேர்ந்த 9,591 பேர் 70 தற்காலிக முகாம்களில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிலவும் சீரற்ற காலநிலை - 13 மாவட்டங்களைச் சேர்ந்த 137,792 பேர் பாதிப்பு குடா கங்கை, கிங் கங்கை மற்றும் நில்வள கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.  அதேநேரம், ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.  கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதனிடையே, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 13 மாவட்டங்களைச் சேர்ந்த 137,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அத்துடன், 344 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.  பாதிக்கப்பட்ட 2,222 குடும்பங்களைச் சேர்ந்த 9,591 பேர் 70 தற்காலிக முகாம்களில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement