• Nov 24 2024

1386 குடும்பங்கள் மண்சரிவு அபாய பகுதிகளில்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Chithra / Aug 28th 2024, 2:34 pm
image


கண்டி மாவட்டத்தில் 1386 குடும்பங்கள் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் உள்ள 20 பிரதேச செயலகப் பிரிவுகளில் 1845 குடும்பங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும்,

19 பிரதேச செயலகப் பிரிவுகளில் 231 குடும்பங்கள் மாத்திரமே கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையின்படி, 235 குடும்பங்கள் மாற்று குடியிருப்புக்கு விண்ணப்பித்திருந்தமை கண்டி மாவட்ட செயலகத்தின் 2023 வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1386 குடும்பங்கள் மண்சரிவு அபாய பகுதிகளில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை கண்டி மாவட்டத்தில் 1386 குடும்பங்கள் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கண்டி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் உள்ள 20 பிரதேச செயலகப் பிரிவுகளில் 1845 குடும்பங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும்,19 பிரதேச செயலகப் பிரிவுகளில் 231 குடும்பங்கள் மாத்திரமே கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த அறிக்கையின்படி, 235 குடும்பங்கள் மாற்று குடியிருப்புக்கு விண்ணப்பித்திருந்தமை கண்டி மாவட்ட செயலகத்தின் 2023 வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement