• Apr 30 2025

தேர்தல் தொடர்பில் மேலும் 14 முறைப்பாடுகள் பதிவு

Chithra / Apr 29th 2025, 11:59 am
image

 

இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான 14 முறைப்பாடுகளை இலங்கை காவல்துறை பெற்றுள்ளது.

முறைப்பாடுகளில் 01 தேர்தல் வன்முறை தொடர்பாகவும், 13  தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாகவும் பெறப்பட்டுள்ளன.

இந்தக் காலகட்டத்தில் எட்டு ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மார்ச் 03 முதல் ஏப்ரல் 28 வரை, தேர்தல் தொடர்பான மொத்தம் 412 முறைப்பாடுகள் காவல்துறைக்கு கிடைத்துள்ளன.

அவற்றில், 326 தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை, 86 தேர்தல் வன்முறை தொடர்பானவை.

இந்த காலகட்டத்தில் மொத்தம் 32 வேட்பாளர்கள் மற்றும் 137 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தம் 31 வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

தேர்தல் தொடர்பில் மேலும் 14 முறைப்பாடுகள் பதிவு  இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான 14 முறைப்பாடுகளை இலங்கை காவல்துறை பெற்றுள்ளது.முறைப்பாடுகளில் 01 தேர்தல் வன்முறை தொடர்பாகவும், 13  தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாகவும் பெறப்பட்டுள்ளன.இந்தக் காலகட்டத்தில் எட்டு ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.மார்ச் 03 முதல் ஏப்ரல் 28 வரை, தேர்தல் தொடர்பான மொத்தம் 412 முறைப்பாடுகள் காவல்துறைக்கு கிடைத்துள்ளன.அவற்றில், 326 தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை, 86 தேர்தல் வன்முறை தொடர்பானவை.இந்த காலகட்டத்தில் மொத்தம் 32 வேட்பாளர்கள் மற்றும் 137 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மொத்தம் 31 வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement