• Mar 23 2025

புத்தளம் மாவட்டத்தில் 14 வேட்புமனு நிராகரிப்பு!

Thansita / Mar 22nd 2025, 3:09 pm
image

எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் 111 வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்ட போதிலும்,

அதில் 14 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், 97 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புத்தளம் மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் 118 தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ள நிலையில், அதில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் 111 வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தன.

இதன்போது, புத்தளம் மாநகர சபைக்கு போட்டியிடுவதற்காக செய்யப்பட்ட வேட்புமனுவில் மூன்று வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஆராச்சிக்கட்டுவ மற்றும் வென்னப்புவ ஆகிய பிரதேச சபைகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் தலா இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மேலும், சிலாபம் நகர சபை, கற்பிட்டி பிரதேச சபை, வனாத்தவில்லு பிரதேச சபை, நவகத்தேகம பிரதேச சபை, ஆனமடுவ பிரதேச சபை, சிலாபம் பிரதேச சபை, நாத்தாண்டிய பிரதேச சபைகளுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் தலா ஒவ்வொரு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

உரிய நேரத்தில் வேட்புமனுப் பத்திரத்தை கையளிக்கத் தவறியமை மற்றும் இளைஞர்களின் வயதை உறுதிப்படுத்த தவறியமை ஆகிய காணரங்களுக்காகவே குறித்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

புத்தளம் மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மேயர், நகர பிதா, பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்களை தெரிவு செய்ய 668525 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

புத்தளம் மாவட்டத்தில் 14 வேட்புமனு நிராகரிப்பு எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் 111 வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்ட போதிலும், அதில் 14 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், 97 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்தார்.இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,புத்தளம் மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் 118 தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ள நிலையில், அதில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் 111 வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தன.இதன்போது, புத்தளம் மாநகர சபைக்கு போட்டியிடுவதற்காக செய்யப்பட்ட வேட்புமனுவில் மூன்று வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஆராச்சிக்கட்டுவ மற்றும் வென்னப்புவ ஆகிய பிரதேச சபைகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் தலா இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.மேலும், சிலாபம் நகர சபை, கற்பிட்டி பிரதேச சபை, வனாத்தவில்லு பிரதேச சபை, நவகத்தேகம பிரதேச சபை, ஆனமடுவ பிரதேச சபை, சிலாபம் பிரதேச சபை, நாத்தாண்டிய பிரதேச சபைகளுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் தலா ஒவ்வொரு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.உரிய நேரத்தில் வேட்புமனுப் பத்திரத்தை கையளிக்கத் தவறியமை மற்றும் இளைஞர்களின் வயதை உறுதிப்படுத்த தவறியமை ஆகிய காணரங்களுக்காகவே குறித்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.புத்தளம் மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மேயர், நகர பிதா, பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்களை தெரிவு செய்ய 668525 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement