• Nov 26 2024

நிலவும் சீரற்ற வானிலை - நாடளாவிய ரீதியில் 14,700 பேர் பாதிப்பு..!

Chithra / Jan 1st 2024, 11:36 am
image

 

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் நான்காயிரத்து 432 குடும்பங்களைச் சேர்ந்த 14,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கிழக்கு மாகாணத்திலே அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கிழக்கு மாகாணத்தில் மூவாயிரத்து 811 குடும்பங்களை சேர்ந்த 12,518 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் திருகோணமலை - சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படுகின்ற மாவிலாறு அணைக்கட்டின் நான்கு வான் கதவுகள்  திறந்து விடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக மாவிலாறு அணைக்கட்டை அண்டியுள்ள பல்லேவல வெளியிலுள்ள சுமார் 350 ஏக்கர் வேளாண்மை முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது.

அத்தோடு மாவிலாறு அணைக்கட்டுக்குச் செல்லும் சுமார் 6 கிலோ மீற்றர் வீதி நீரில் மூழ்கியுள்ளதுடன் இவ்வீதியூடான தரைவழி போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

இவ்வீதியில் இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


நிலவும் சீரற்ற வானிலை - நாடளாவிய ரீதியில் 14,700 பேர் பாதிப்பு.  நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் நான்காயிரத்து 432 குடும்பங்களைச் சேர்ந்த 14,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், கிழக்கு மாகாணத்திலே அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி, கிழக்கு மாகாணத்தில் மூவாயிரத்து 811 குடும்பங்களை சேர்ந்த 12,518 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேநேரம் திருகோணமலை - சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படுகின்ற மாவிலாறு அணைக்கட்டின் நான்கு வான் கதவுகள்  திறந்து விடப்பட்டுள்ளன.இதன் காரணமாக மாவிலாறு அணைக்கட்டை அண்டியுள்ள பல்லேவல வெளியிலுள்ள சுமார் 350 ஏக்கர் வேளாண்மை முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது.அத்தோடு மாவிலாறு அணைக்கட்டுக்குச் செல்லும் சுமார் 6 கிலோ மீற்றர் வீதி நீரில் மூழ்கியுள்ளதுடன் இவ்வீதியூடான தரைவழி போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வீதியில் இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement